"ஈரான் பெரிய விலை கொடுக்கணும்.." இஸ்ரேல் எச்சரித்த மறுநொடி.. உள்ளே வந்த அமெரிக்கா! என்னாச்சு

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் பெரும் பரபரப்பை உருவாக்கி இருந்த நிலையில், இதற்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் எச்சரித்து இருக்கிறது.

இஸ்ரேல் மீது நேற்று முன்தினம் இரவு ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. கடந்த சில நாட்களாகவே ஈரான் எச்சரித்து வந்த நிலையில், அதற்கேற்ப இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பல நூறு ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் ஈரானை நோக்கிப் பாய்ந்துள்ளது.

Israel Says it will give exact price for Iran When Time Is Right

இதற்கிடையே ஈரான் தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுப்போம் என்று இஸ்ரேல் மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருக்கிறது. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் மீண்டும் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

பெரிய விலை கொடுக்கணும்: தனது நாட்டின் மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய ஈரானுக்குத் தக்க நேரத்தில் பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்துள்ள இஸ்ரேல் அமைச்சர் பென்னி காண்ட்ஸ், சரியான நேரத்தில் பதிலடி கொடுப்போம் என்றும் இதற்கு ஈரான் பெரிய விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

தீவிரமாக ஸ்கெட்ச் போட்ட ஈரான்! ஆனாலும் ஈஸியாக தப்பிய இஸ்ரேல்- எது எப்படி! உற்று நோக்கும் உலக நாடுகள்


இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் மிகப் பெரியளவில் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாக ஐநாவுக்கான ஈரானின் தூதர் கூறுகையில், "எங்களை நாங்களே தற்காத்துக்கொள்ள உரிய உரிமை இருக்கிறது. இஸ்ரேலின் அத்துமீறல் நடவடிக்கை காரணமாகவே இந்தத் தாக்குதலை நடத்தி உள்ளோம். சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள எங்கள் தூதரக கட்டிடத்தை அழித்ததற்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளோம்" என்றார்.

இஸ்ரேல் பிரதிநிதி: அதேபோல ஐநாவிற்கான இஸ்ரேல் பிரதிநிதி கிலாட் எர்டன் இது குறித்துக் கூறுகையில், "ஈரான் நடத்திய தாக்குதலை ஏற்கவே முடியாது. இதனால் ஐநா பாதுகாப்பு கவுன்சில் ஈரான் மீது அனைத்து விதமான தடைகளையும் விதிக்க வேண்டும்" என்றார். அமெரிக்கா, பிரிட்டன் என்று உலகின் அனைத்து நாடுகளுமே ஈரானின் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈரான்: இஸ்ரேலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் இந்த மேட்டர் இத்தோடு முடிந்துவிட்டது என்றும் ஈரான் எச்சரித்துள்ளது. ஒரு வேலை இஸ்ரேல் மீண்டும் ஒரு முறை தவறு செய்தால், அதற்கான பதில் மிக மிகக் கடுமையாக இருக்கும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதனால் இந்த பிரச்சினை இப்போதைக்கு முடிந்தாலும் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்பது போன்ற சூழலே இருக்கிறது.

அமெரிக்கா: இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை அமெரிக்கா இதில் நேரடியாகத் தலையிடவே இல்லை. ஈரானுக்கு எதிரான எந்தவொரு பதிலடி நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா ராணுவ ஆதரவை வழங்காது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் அமெரிக்க அதிபர் பைடன் கூறிவிட்டார். அதுபோன்ற செயல்களை அமெரிக்கா ஆதரிக்காது அதற்கு சப்போர்ட்டும் செய்யாது என்று அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் ஒரே நேரத்தில் பல நூறு ஏவுகணைகளை வீசிய போதிலும், இஸ்ரேலிடம் இருக்கும் பாதுகாப்பு அமைப்பு பெரும்பாலான ஏவுகணைகளை இடைமறித்து அழித்துவிட்டன. இஸ்ரேலின் வான்வழி பாதுகாப்பு அமைப்பு கிட்டதட்ட அனைத்து ஏவுகணைகளையும் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துவிட்டதாகவும் சுமார் 99% ஏவுகணைகள் நாட்டின் எல்லைக்குள் நுழையும் முன்பே அழிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+