பலமுனைகளில் இருந்து வரும் தாக்குதலுக்கு நடுவே.. இஸ்ரேல் இறக்கும் புதிய லேசர் ஆயுதம்.. போச்சு
டெல் அவிவ்: இஸ்ரேல் தனது வான் பாதுகாப்பு அமைப்பில் அயர்ன் பீம் எனப்படும் புதிய லேசர் தொழில் நுட்பம் கொண்ட ஏவுகணை தடுப்பு அமைப்பை விரைவில் இணைக்க திட்டமிட்டுள்ளது. ஒளியின் வேகத்தில் லேசர் ஒளிக்கதிர்களை வீசி, எதிரி நாடுகளின் எறிகணைகள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை அழிக்கும் திறன் கொண்டதாக இந்த புதிய தளவாடம் உள்ளது. நாலாபுறமும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் இஸ்ரேல், இந்த வான்பாதுகாப்பு அமைப்பை தனது பாதுகாப்பு அமைப்பில் சேர்க்க இருக்கிறது.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே ஓராண்டுக்கும் மேலாக சண்டை நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்து கட்டும் வரை ஓய மாட்டோம் எனக்கூறியுள்ள இஸ்ரேல், காசா மீது தரைவழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.

ஈரான் தாக்குதல்: ஹமாஸ் மீதான தாக்குதலை நடத்தும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரானிய ஆதரவு அமைப்பான லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால், ஹிஸ்புல்லா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக இஸ்ரேல் மீது ஈரானும் கடும் கோபத்தில் உள்ளது. இந்த சூழலில் தான் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மூலமாக கடந்த மாதம் திடீரென தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேல் எச்சரிக்கை: ஈரானின் தாக்குதலுக்கு பதிலடியக இஸ்ரேலும், அந்த நாட்டின் ராணுவ தளங்களை குறிவைத்து குண்டு மழை பொழிந்தது. இஸ்ரேல் - ஈரான் இடையே மோதல் வெடித்து இருப்பதால் மத்திய கிழக்கில் போர் மேகம் சூழ்ந்ததுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலுக்கு சரியான நேரத்தில், சரியான முறையில் பதிலடி கொடுப்போம் என ஈரான் கூறியுள்ளது. ஈரான் மீண்டும் தாக்கினால் மிகக் கடுமையான எதிர்வினைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
இஸ்ரேலுக்கு நெருக்கடி: இப்படி நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே செல்லும் மோதல்களால் இஸ்ரேலுக்கு நாலாபுறமும் நெருக்கடி அதிகரித்துள்ளது. இத்தகைய போர் பதற்றத்திற்கு மத்தியில் அதி நவீன புதிய லேசர் அயர்ன் டோம் எனும் தளவாடத்தை பயன்படுத்த இஸ்ரேல் ஆயத்தமாகி வருகிறது. எதிரி நாடுகளிடம் இருந்து வரும் ஏவுகணைகள் மற்றும் தாக்குதல்களை அழிக்க ஏற்கனவே இஸ்ரேலிடம் அயர்ன் டோம் எனப்படும் தொழில்நுட்பம் உள்ளது.
அயர்ன் டோர்ம்: இந்த அயன் டோர்ம் என்பது ஏவுகணைகள் உள்ளிட்ட வான்வழி தாக்குதல்களை வானிலேயே இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டது. இத்தகைய சூழலில் தான் புதிய லேசர் டெக்னாலஜியுடன் கூடிய அயர்ன் பீம் கருவியை இஸ்ரேல் கொண்டு வர உள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், "புரெஜெக்டைல் (பீரங்கிகளால் ஏவப்படும் ஆயுதங்கள்) போன்றவற்றை வீழ்த்த இந்த அதி நவீன சக்தி வாய்ந்த அயன் பீம் கருவி பயன்படுத்தப்படும்.
ஒளியின் வேகத்தில்: ஒராண்டிற்குள் இந்த லேசர் ஆயுதம் பயன்பாட்டுக்கு வரும். போரின் புதிய சகாப்தமாக இது இருக்கும் என்று தெரிவித்துள்ளது. 500 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட இந்த லேசர் அயன் பீம் ஏவுகணைகள், டிரோன்கள், ராக்கெட்டுகள், மோர்ட்டார்கள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் திறன் கொண்டது.
ஒளியின் வேகத்தில் லேசர்களை பாய்ச்சும் திறன் கொண்ட இந்த அயர்ன் பீம் ஆயுதம், டிரோன்கள் உள்ளிட்டவற்றை வெப்பப்படுத்தி அழிக்கும் ஆற்றல் கொண்டது என இஸ்ரேல் பாதுகாப்பு வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், தெளிவாக பார்க்க முடியாத கால சூழல்களின் போதும், மோசமான வானிலை சமயத்திலும் இதை பயன்படுத்த முடியாதாம்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications