இஸ்ரேலை காலி செய்ய சீக்ரெட்டாக உளவாளிகளை இறக்கும் ஈரான்.. மொசாட் அமைப்பை கூட விடல! பகீர் திட்டம்
டெல் அவிவ்: இஸ்ரேலுக்கும் ஈரான் நாட்டிற்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே ஈரான் நாட்டிற்காக உளவு பார்த்தாக சந்தேகத்தின் பேரில் இஸ்ரேல் தம்பதியரை இஸ்ரேல் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே ஈரானுக்காக வேலை செய்ததாக ஒரு கேங்க்கை இஸ்ரேல் போலீஸ் தடுத்து வைத்த நிலையில், இப்போது இந்த தம்பதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய கிழக்கில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இஸ்ரேலுக்கும் ஈரான் நாட்டிற்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழலே நிலவி வருகிறது.

உளவு பார்த்தாக: இதற்கிடையே ஈரானுக்காக இஸ்ரேலை உளவு பார்த்தாக கடந்த வியாழக்கிழமை தம்பதியை இஸ்ரேல் போலீசார் கைது செய்தனர். இது சர்வதேச அளவில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஈரானின் ஆட்சேர்ப்பு முயற்சிகளை முறியடிக்கத் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம் என்று இஸ்ரேல் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட் தெரிவித்துள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இரண்டு இஸ்ரேலியர்கள், மத்திய நகரமான லோட்டைச் சேர்ந்தவர்கள் ஆகும். அவர்கள் தேசிய உள்கட்டமைப்புகள், பாதுகாப்பு தளங்கள் மற்றும் ஒரு பெண் கல்வியாளரைக் கண்காணித்து உளவு தகவல்களைச் சேகரித்தாக இஸ்ரேல் சார்பில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரேல் மேலும் கூறுகையில், "லோட் நகரில் வசிக்கும் ரஃபேல் மற்றும் லாலா கோலிவ் ஈரான் நாட்டிற்காக ஆட்சேர்ப்பு செய்யும் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டனர்" என்று அதில் கூறப்பச்சுள்ளது.
என்ன புகார்: இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பின் தலைமையகம் உட்பட பல முக்கியமான இஸ்ரேல் தளங்களைக் கண்காணித்தது உளவு சேகரித்ததாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
முன்னதாக கடந்த வாரம் தான் கிழக்கு ஜெருசலேமில் இருந்து ஏழு பாலஸ்தீனியர்கள் அடங்கிய குழுவை இஸ்ரேல் போலீசார் கைது செய்தனர். இவர்கள் உளவு குழு போலச் செயல்பட்டு இஸ்ரேலே நாட்டை உளவு பார்க்கிறார்கள் என்பதே குற்றச்சாட்டாகும். இவர்கள் மட்டுமின்றி ஈரான் நாட்டிற்காகப் பல நூறு பேர் உளவு பார்ப்பதாகவும் அவர்கள் அனைவரையும் நிச்சயம் கைது செய்வோம் என்றும் இஸ்ரேல் போலீஸ் தெரிவித்துள்ளது.
பதற்றம்: கடந்த செப்டம்பரில், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உட்பட உயர் அதிகாரிகளைப் படுகொலை செய்ய ஈரான் முயன்றதாகவும் இதற்காக மொர்டெகாய் மாமன் என்று அடையாளம் காணப்பட்ட நபரை இஸ்ரேல் கைது செய்தது குறிப்பிடத்தக்கது. இதுபோல இஸ்ரேலை உளவு பார்க்க ஈரான் தொடர்ந்து முயல்வதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இது பிராந்தியத்தில் நிலைமையை மேலும் மேலும் மோசமாக்கியே வருகிறது.
மத்திய கிழக்கு: மத்திய கிழக்கைப் பொறுத்தவரை இப்போது இஸ்ரேலைச் சுற்றிலும் மோதல் நடந்து வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடங்கிய போர் ஓராண்டைக் கடந்தும் தொடர்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். இது ஒரு பக்கம் இருக்க லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா உடனும் மோதல் வெடித்துள்ளது. இரண்டு அமைப்புகள் மீதும் இஸ்ரேல் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹமாஸ் தலைவர் சின்வாரும், ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டுள்ளனர்.
இரு அமைப்புகளின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தும் மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்தவே முயன்று வருகின்றன. எனவே, சில வாரங்களில் போர் முடியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications