Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இஸ்ரேல் கால்பந்து ரசிகர்கள் மீது சரமாரியாக தாக்குதல்.. உடனடியாக நெதர்லாந்துக்கு விரைந்த விமானங்கள்

Subscribe to Oneindia Tamil

ஆம்ஸ்டர்டாம்: அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இரவு வேளையில் கடுமையான தாக்கப்பட்ட இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விமானங்கள் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிற்கு விரைந்துள்ளதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. இது திடீரென நடத்தப்பட்ட ஹிட் அண்ட் ரன் தாக்குதல்கள் என்று இஸ்ரேல் அதிகாரிகள் விமர்சித்தனர்

இஸ்ரேலுக்கு ஈரானுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது. ஏற்கனவே இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதேபோல் இஸ்ரேல் லெபானான் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் சுற்றியுள்ள அண்டை நாடுகள் எல்லாமே கிட்டத்தட்ட பகைமை உணர்வில் தான் இஸ்ரேல் மீது இருக்கின்றன.

இந்நிலையில் இஸ்ரேல் கால்பந்து ரசிகர்கள் ஐரோப்பிய நாடான நெதர்லாந்திற்கு கால்பந்துபோட்டியை காண்பதற்கு சென்றுள்ளனர். நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் நடந்த கால்பந்து போட்டி நடந்த பின்னர் இஸ்ரேலிய ரசிகர்கள் சிலர் அரபு தேசத்தின் ஆதரவாளர்களை நோக்கி ஆத்திரமூட்டும் வகையில் கோஷமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அரபுதேச ஆதரவாளர்கள், அவர்களை கடுமையாக தாக்கிதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதுபற்றி வெளியான தகவல்களை பார்ப்போம்.

Israeli football fans faced hit-and-run attacks prompting Israel to dispatch rescue planes

கடந்த வியாழன் அன்று மாலை இஸ்ரேலிய கால்பந்து கிளப்பான மக்காபி டெல் அவிவின் யூரோபா லீக் கால்பந்து போட்டியினை நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் விளையாடியது. இந்த போட்டி நடந்த பின்னர் சில இஸ்ரேலிய ஆதரவாளர்கள் அரபு நாடுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அரபு தேச ஆதரவாளர்கள் அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்தனர் . இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இந்த வன்முறையில் ஈடுபட்டதாக அரபுதேச ஆதரவாளர்கள் 60 பேரை நெதர்லாந்து போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே சமூக ஊடகங்களில் வெளியான வீடியோவில் இஸ்ரேல் ஆதரவாளர்கள் கோஷமிடுவதும், அதற்கு பதிலடியாக அரபு தேச ஆதரவாளர்கள் தாக்குவதுமாக உள்ளது. அத்துடன் அந்த வீடியோவில் மோதலில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த களம் இறங்கியதும் தெரிந்தது.

இந்த சம்பவம் குறித்து கருத்த தெரிவித்த ஆம்ஸ்டர்டாம் மேயர் பெம்கி ஹால்சேமே (Femke Halsema), மெக்காபி டெல் அவிவ் ஆதரவாளர்கள், சில வன்முறையாளர்களால் கடுமையாக தாக்கப்பட்டனர். அவர்களை உடனடியாக போலீசார் காப்பாற்றி ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் திடீரென நடத்தப்பட்ட ஹிட் அண்ட் ரன் தாக்குதல் ஆகும். இருசக்கர வாகனங்களில் வந்த அரபு ஆதரவாளர்கள்.. நேற்று இரவு முழுவதும் இஸ்ரேல் கால்பந்து அணியின் ஆதரவாளர்களைத் தேடினர் என்று நடந்த சம்பவத்தை விவரித்தார்.

இதனிடையே 1938 ம் ஆண்டு ஜெர்மனி முழுவதும் யூதர்களுக்கு எதிரான நாஜி படுகொலையை நினைவு கூறும் நிகழ்ச்சி நடந்த போது ஆம்ஸ்டர்டாமில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுததப்பட்டது. இதனிடையே இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த மெக்காபி டெல் அவிவ் கால்பந்து அணி விளையாட சென்றதை பார்க்க இஸ்ரேல் ரசிகர்கள் மோதலில் காயம் அடைந்த தகவல் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்துஅவர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட இஸ்ரேலியர்களை அழைத்து வர தனி விமானங்களை உடனடியாக அனுப்பி வைத்தார்.

நெதர்லாந்து பிரதமர் டிக் ஷூஃப் இதுபற்றி கூறும் போது, "இஸ்ரேலிய குடிமக்கள் மீதான யூத-விரோத தாக்குதல்களை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.. இது போன்ற நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று காட்டமாக கூறினார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசி மூலம் பேசிய நெதர்லாந்து பிரதமர் "குற்றவாளிகளை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதி அளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+