லண்டனில் நிகழ்த்தப்பட்டது ஐஎஸ் தீவிரவாத ஸ்டைல் 'தனி ஓநாய்' தாக்குதல் - இந்திய புலனாய்வுத்துறை தகவல்
லண்டனில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலை ஐஎஸ் இயக்கத்தின் தனி ஓநாய் தாக்குதல் என இதனைக் கண்காணித்து வரும் இந்திய புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது
லண்டன்: லண்டனில் 3 வெவ்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய பயங்கரத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் இது ஒரு தனி ஓநாய் தாக்குதல் என இந்திய புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.
லண்டன் பாலத்தில் நடந்து சென்ற பாதசாரிகளை குறி வைத்து அவர்கள் மீது வாகனங்களை ஏற்றி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதேபோல் போரோக் மார்க்கெட் பகுதியிலும் கண்ணில் பட்டவர்களை கத்தியால் குத்தி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
வாக்ஸ்ஹால் பகுதியிலும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தனி ஓநாய் தாக்குதல்
இந்நிலையில் இந்த தாக்குதலைக் கண்காணித்து வரும் இந்திய புலனாய்வுத்துறை இது ஐஎஸ் தீவிரவாத ஸ்டைலான தனி ஓநாய் தாக்குதல் என தெரிவித்துள்ளது. லண்டனில் மீண்டும் நடத்தப்பட்டிருக்கும் இந்த தீவிரவாதத் தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் கைவரிசை என எதிர்பார்க்கப்படுகிறது.

கொண்டாடும் ஜிகாதிஸ்டுகள்
இந்த தாக்குதலை பல ஜிகாதிஸ்ட் அமைப்புகள் டிவிட்டரில் கொண்டாடி வருகின்றன. நேற்று இரவு நடைபெற்ற இந்தத் தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பிரதமர் கண்டனம்
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரிட்டன் பிரதமர் தெரேசா மே, லண்டன் பாலத்தின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் தீவிரவாதிகளின் சாத்தியமான செயல் என கண்டனம் தெரிவத்துள்ளார்.இதனிடையே இதனைக் கண்காணித்து வரும் இந்திய புலனாய்வுத்துறை இது முற்றிலும் ஐஎஸ் தீவிரவாதிகளின் ஸ்டலான தனி ஓநாய் தாக்குதல் என தெரிவித்துள்ளது.

பரிமாறப்படும் வாழ்த்து செய்திகள்
மேலும் தாக்குதலுக்கு வாழ்த்து தெரிவித்து ஐஎஸ் தீவிரவாதிகளிடையே செய்திகள் பரிமாறிக் கொள்ளப்படுவதாகவும் தந்தி அனுப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர்கள் பொறுப்பேற்பார்கள் என்றும் இந்திய புலனாய்வுத்துறை கூறியுள்ளது.

ஐஎஸ் ஸ்டைல் தாக்குதல்
ஐஎஸ் தீவிரவாதிகள் ஸ்டைல் தாக்குதல் என அரசு செய்தி வெளியிட்டுள்ளது. இதுபோன்ற தாக்குதல்களை ஐஎஸ் தீவிரவாதிகள் தாங்கள் வெளியிட்ட கையேட்டில் குறிப்பிட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications