Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"XX".. பாலியல் தீண்டல்.. முத்தம் கேட்ட மேனேஜர்.. கோர்ட்டுக்கு ஓடிய பெண்.. கடைசியில் பார்த்தால்.. ஐயோ

Subscribe to Oneindia Tamil

லண்டன்: "இந்த நீதிமன்றம் பல விசித்திர வழக்குகளை சந்தித்திருக்கிறது" என்று பராசக்தி படத்தில் வருவதுபோல, பல்வேறு தீர்ப்புகள், பல்வேறு வழக்குகளின் மூலம் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன.. அப்படித்தான் இப்போதும் ஒரு தீர்ப்பு வந்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்தது.. அங்குள்ள ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவர் கந்து என்கிற காந்தீலால்.. இவருக்கு 35 வயதாகிறது..

இவர் தன்னுடைய நண்பர் பர்னு என்பவருடன் சேர்ந்து, ஒரு இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார். இதனால், பாதிக்கப்பட்ட பெண், கடந்த 2018 ஜனவரி 18-ம் தேதி போலீசில் புகார் அளித்தார்...

666 நாட்கள்: இதையடுத்து, 2020 டிசம்பர் மாதம் 2 நண்பர்களையும் கைது செய்து, போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.. இது தொடர்பான வழக்கும் ரத்லம் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது... இந்த வழக்கு கடந்த வருடம் அக்டோபர் 10-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, கந்து மற்றும் பர்னு மீதான குற்றங்களை அரசு தரப்பால் நிரூபிக்க முடியாமல் போயிற்று.. இதனால், 666 நாட்கள் சிறைவாசத்துக்கு பிறகு, கந்துவும், பர்னுவும் விடுவிக்கப்பட்டனர்.

IT woman worker sues her boss for sending xx word on work email and what happened in london court

சிறை தண்டனை: ஜெயிலில் இருந்து விடுவிக்கப்பட், கந்து சும்மாயில்லை... வலிய போய் ஒரு வழக்கை தொடர்ந்தார்.. அதில், தன் மீது போலியாக கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும், அதை வைத்து, 666 நாட்கள் அதாவது 2 வருடங்கள் ஜெயில் தண்டனை அனுபவித்ததாகவும், இதனால் தனக்கு மத்தியபிரதேச அரசு 10 ஆயிரத்து 6 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரி, மனு தாக்கல் செய்தார்.. அதுமட்டுமல்ல ஜெயிலில் என்னவெல்லாம் கஷ்டப்பட்டார் என்பதையும் லிஸ்ட் போட்டு சொல்லியிருந்தார் கந்து.

"ஜெயிலில் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் லேசில் சொல்ல முடியாது... என் மனைவியால், எனக்கு உள்ளாடைகூட வாங்கி தர முடியவில்லை.. கையில் காசில்லை.. ஜெயிலுக்குள் நிறைய வெயில் அடித்தது.. குளிர் அடித்தது.. அதற்கேற்ற உடைகள் இல்லாமல் கஷ்டப்பட்டேன். சிறையில் இருந்து வெளியே வந்தபிறகு, தோல் தொடர்பான நோய்கள் வந்துவிட்டது.. தலைவலி அடிக்கடி வந்தது.. கால் வலி உயிர்போகுது.. 6 பேர் கொண்ட குடும்பத்தில் சம்பாதிப்பவன் நான் மட்டும்தான்.. என் மனநிலைமையை கொஞ்சம் யோசித்து பாருங்கள்..

தப்பா போயிடுச்சு: நல்லவேளை, கடவுளின் ஆசிர்வாதத்தால் நான் ஜெயிலில் இருந்து வெளியே வந்துவிட்டேன்.. இருந்தாலும், போலி மற்றும் இட்டுக்கட்டிய குற்றச்சாட்டுகள் என் மீது திணிக்கப்பட்டன.. இதனால் என் வாழ்க்கையே நாசமா போச்சு.. தொழில் செய்ய முடியவில்லை.. இருந்த வேலையும் போச்சு.. எனக்கு கெட்ட பெயர் வந்துடுச்சு.. டிகிரி படிக்கலாம்னு ஆசையா இருந்தேன்.. படிக்க முடியாமல் போயிடுச்சு.. வாழ்க்கையில் முன்னேறலாம்னு நினைச்சேன்.. முன்னேற முடியாமல் போச்சு.. அதனால், இந்த 6 காரணங்களுக்காக, எனக்கு தலா 1 கோடி ரூபாய் என மொத்தம் 6 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

இதைவிட முக்கியமாக, என் மீது போடப்பட்ட போலி வழக்கால் 666 நாட்கள் ஜெயிலுக்குள் இருந்தேன்.. "மனிதனுக்கு கடவுள் கொடுத்த பரிசான பாலியல் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் போய்விட்டது.. இந்த பாலியல் சுகத்தை இழந்ததற்காக" மத்திய பிரதேச அரசு எனக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று மனுவில் கூறியிருந்தார். இந்த சம்பவம் மத்திய பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கேஸ் இன்னும் விசாரணைக்கு வரவில்லை.. நீதிமன்றம் என்ன சொல்ல போகிறது என்றும் தெரியவில்லை..

பாலியல் சுகம்: ஆனால், பாலியல் வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டுகளை ஏன் நிரூபிக்க முடியவில்லை.. சம்பந்தப்பட்ட பெண் போலீசில் புகார் தந்தும் ஏன் நடவடிக்கை இல்லை? எப்படி ஆதாரங்கள் இல்லாமல் போயிற்று? கைதான இன்னொரு நபர் எங்கே? என்றெல்லாம் இணையத்தில் கேள்விகள் எழுந்தன.. வெறும் 2 வருஷம் ஜெயிலுக்கு போனதால் பாலியல் இன்பத்தை அனுபவிக்க முடியாமல் போய்விட்டது, பத்தாயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வேண்டும் என்று கந்து கேட்கிறாரே, அப்படியானால் இவரால் நேரடியாக நாசம் செய்யப்பட்ட அந்த பெண்ணின் நிலைமை என்னாவது? என்றெல்லாம் இணையவாசிகள் ஆதங்கத்துடன் கேள்வி கேட்டார்கள்.

மேனேஜர்: இது ஒரு உதாரணம்தான்.. இப்படி நிறைய விசித்திரங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. இதோ லண்டனில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. லண்டனில் எஸ்டாக்ஸ் என்ற நிறுவனம் உள்ளது. இது, காகிதமில்லா வணிக ஆலோசனை வழங்கும் நிறுவனமாகும்.. இந்த அலுவலகத்தின் மேனேஜராக வேலை பார்ப்பவர் அலெக்சாண்டர் கூலண்ட்ரிஸ்.. இவர் மீது அதே நிறுவனத்தில் பணியாற்றும் திட்ட மேலாளர் கரீனா காஸ்டரோவா என்பவர் ஒரு பரபரப்பு புகாரை தெரிவித்திருந்தார்.

அதாவது மேனேஜர் அலெக்சாண்டர், இந்த பெண்ணிடம் முத்தம் கேட்டாராம்.. பாலியல் ரீதியாக தனக்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக் அந்த பெண்ணை கேட்டுக் கொண்டாராம்.. அதற்கு பிறகு மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.. அதனால், பாலியல் டார்ச்சர் தந்த மேனேஜர் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தின் அதிகாரபூர்வ மின்னஞ்சலிலேயே புகாரை தெரிவித்திருந்தார்..

IT woman worker sues her boss for sending xx word on work email and what happened in london court

முத்தம்: ஒருவேளை அலுவலகம் மேனேஜருக்கு சாதகமாக போய்விட்டால் என்ன செய்வது என்று நினைத்து, அலெக்சாண்டருக்கு எதிராக லண்டன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.. அந்த புகாரில், "காரணமே இல்லாமல் மேனேஜர் எனக்கு அடிக்கடி வீடியோ கால் செய்கிறார், அடிக்கடி அவரது கேபினுக்கு வரவழைத்து பேசுகிறார்.. சில முறை என்னை பாலியல் ரீதியாக தீண்டியிருக்கிறார்.

அவர் எனக்கு அனுப்பும் மெயிலில் XX என்பது முத்தங்களை குறிக்கிறது, YY என்பது பாலியல் தொடர்பை குறிக்கிறது, ???? என்பது அவரது இச்சைக்கு எனக்கு விருப்பம் இருக்கிறதா? என்பதை குறிக்கிறது. இதற்கு நான் பதிலளிக்காமல், அவரிடம் இருந்து விலகியிருந்தேன். அதன்பின் என்னை வேலையில் இருந்து நீக்கிவிட்டார். அதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.. இதையடுத்து, 2 தரப்பு வாதங்களையும் கேட்ட உள்ளூர் நீதிமன்றம், அந்த பெண்ணிடம் ஆதாரம் கேட்டது..

அதிர்ந்த பெண்: முத்தம் கேட்டதற்கும், பாலியல் தொல்லை தந்ததற்கும் ஆதாரங்கள் எங்கே என்று கேட்கவும், இதைக்கேட்டு அந்த பெண் அதிர்ந்தார்.. இறுதியில், குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சொன்ன கோர்ட், அதீத சிந்தனையால் அந்த பெண் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சொல்வதாக கூறி, 5,000 பவுண்ட் அதாவது, நம்ம ஊர் பணத்தில், ரூ.5.15 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.. அந்த தொகையை அவர் வேலை பார்த்து வரும் எஸ்டாக்ஸ் நிறுவனத்துக்கு செலுத்திவிட வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டுள்ளதாம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+