ஜப்பான் ராணுவ பட்ஜெட்டை பார்த்தீர்களா.. மிரள வைத்த தீவு நாடு! 3ம் உலகப்போர் வெடிக்கும் அபாயம்!

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: தைவான் விவகாரத்தில் மூக்கை நுழைத்திருக்கும் ஜப்பான், தற்போது தனது ராணுவ பட்ஜெட்டை முன்னெப்போதும் இல்லாத அளவில் உயர்த்தியிருக்கிறது. இதனால் 3ம் உலகப்போர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த முறை ஜப்பான், தனது ராணுவத்துக்கு ரூ.5.20 லட்சம் கோடியை ஒதுக்கி இருக்கிறது. முன்னெப்போதும் ஒதுக்கப்பட்ட தொகையை விட இது மிக அதிகம். எனவேதான் போர் குறித்த அச்சம் எழுந்திருக்கிறது.

Japan military budget

மூக்கை நுழைத்த ஜப்பான்

தைவான் விவகாரம் உலகம் அறிந்தது. ஒரு காலத்தில் சீனாவின் ஒரு பகுதியாக இருந்த தைவான் பின்னர் தனியாக பிரிந்து சென்றது. இதை மீண்டும் தன் வசப்படுத்த சீனா முயன்று வருகிறது. ஆனால், அமெரிக்கா தைவானுக்கு சப்போர்ட் செய்து, ஏழரையை கூட்டியுள்ளது. சூழல் இப்படி இருக்கையில், இந்த விவகாரத்தில் ஜப்பான் மூக்கை நுழைத்திருக்கிறது. தைவானை தாக்கினால் நாங்கள் சீனாவை தாக்குவோம் என்று ஜப்பான் எச்சரித்துள்ளது.

ஜப்பானின் திட்டம்

இதனால், ஜப்பானுக்கு எதிராக சீனா பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கிறது. இந்த நிலையில்தான் ஜப்பான் தனது ராணுவ பட்ஜெட்டை அதிகரித்திருக்கிறது. இது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போலாகும்.

அடுத்தடுத்த ஆண்டுகளில், ஜப்பான் ஜிடிபியில் 2 சதவிகிதம் அளவுக்கு ராணுவத்திற்கு ஒதுக்க திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார். இது குறித்து அந்நாட்டு பிரதமர் கூறுகையில், நாங்கள் 5 ஆண்டு திட்டங்களை வகுத்து அதன் அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். ராணுவ பட்ஜெட்டை உயர்த்தியதும் இந்த திட்டத்தின்படிதான் என்று கூறியுள்ளார்.

ஜப்பான் கவனம் செலுத்தும் இடம்

ஜப்பான் ஒரு தீவு நாடு. எனவே, கடலோர பாதுகாப்பை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. இதற்காக நவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்திருக்கிறது. மூன்று முனைகளில் ஜப்பான் கவனம் செலுத்துகிறது. வான்வெளி, கடல் பரப்பு மற்றும் கடலுக்கு அடியில் நடத்தப்படும் தாக்குதல் என, மூன்று வழி தாக்குதலை தீவிரப்படுத்தவும், இந்த தாக்குதலில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தவும் ஜப்பான் திட்டமிட்டிருக்கிறது. இதற்காக 5,748 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருக்கிறது.

நிலத்திலிருந்து கப்பல்களை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை வடிவமைப்பதிலும், அதை திறம்பட பயன்படுத்துவதிலும் ஜப்பான் கவனம் செலுத்துகிறது.

சீனாவின் அச்சம்

ஜப்பான் லேசுபட்ட ஆள் கிடையாது. தம்மாத்துண்டு நாடுதான், ஆனால் அந்நாடு கண்டுபிடிக்காத விஷயமே கிடையாது. இப்படி இருக்கையில் விண்வெளியில் அமெரிக்காவுடன் சேர்ந்து ஏவுகணைகளை நிலை நிறுத்த ஜப்பான் திட்டமிட்டு வருகிறது என்று சீனா அச்சம் தெரிவித்திருக்கிறது. இதுவரை ஆய்வுக்காக இருந்த விண்வெளியை ஜப்பான் ராணுவமயப்படுத்துகிறது என்றும் சீனா குற்றம் சாட்டியுள்ளது.

ரேடார் லாக்-ஆன்

வெறும் குற்றச்சாட்டுடன் நிற்காமல், ஜப்பான் விமானங்களை சீனா மிரட்டியுள்ளது. அதாவது, ஜப்பான் போர் விமானங்களை ரேடார் லாக்-ஆன் செய்திருக்கிறது. இது ஒருவரின் நெற்றியை பார்த்து துப்பாக்கியை நீட்டுவது போன்றதாகும். வழக்கமாக ரேடாரில் ஏதேனும் பொருள், விமானம் தென்படுகிறதா? என்று சர்ச் மட்டுமே செய்யப்படும். ஆனால், ரேடாரில் தென்படும் ஒரு குறிப்பிட்ட விமானத்தை மட்டும் குறி வைத்து, அந்த விமானம் எவ்வளவு வேகத்தில் செல்கிறது? என்பதை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து சிக்னல்களை அனுப்புவதைதான் ரேடார் லாக்-ஆன் என்று சொல்கிறார்கள்.

இப்படி ரேடாரில் லாக் செய்யப்பட்ட விமானம் விரைவில் தாக்கப்படும் என்று அர்த்தம். இப்படியான எச்சரிக்கையைதான் சீனா, ஜப்பானுக்கு செய்திருக்கிறது. இதெல்லாம் 3ம் உலகப்போரின் தொடக்கம் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+