ஒன்று சேரும் 10+ வல்லரசுகள்.. சீனாவிற்கு எதிராக நாடுகளை திரட்ட திட்டம்.. ஜப்பானின் மாஸ்டர் பிளான்!

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: சீனாவிற்கு எதிராக உலக நாடுகளை ஒன்று திரட்ட ஜப்பான் முடிவு செய்துள்ளது. இதற்காக ஏசியன் குழுவில் இருக்கும் நாடுகள் மற்றும் சீனாவிற்கு எதிராக இருக்கும் நாடுகள் உடன் ஜப்பான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது .

Recommended Video

    உலக நாடுகளை ஒன்றிணைக்கும் Japan.. China- க்கு சிக்கல்

    இந்தியா சீனா இடையே எப்படி எல்லையில் கடுமையான மோதல் நிலவி வருகிறதோ அதேபோல் ஜப்பான் சீனா இடையிலும் கடுமையான மோதல் நிலவி வருகிறது. ஜப்பானுக்கு எதிராக சீனா தொடர்ந்து கடல் எல்லையில் அத்துமீறி வருகிறது.

    சீனாவும் ஜப்பானும் கிழக்கு கடல் எல்லை பகுதியை பகிர்ந்து கொள்கிறது. இந்த கடல் எல்லை பகுதியில் சீனா தொடர்ந்து எல்லை தாண்டி சென்று ஜப்பானை அத்துமீற தொடங்கி உள்ளது.

    ஜப்பான் உடன் மோதல்

    ஜப்பான் உடன் மோதல்

    சென்ற வருடம் எல்லாம் இந்த மோதல் பெரிதாக இல்லை. ஆனால் கடந்த ஒரு வருடமாக ஜப்பான் கடல் எல்லைக்குள் சீனாவின் போர் கப்பல்கள் அத்துமீறி ரோந்து பணிகளை மேற்கொள்கிறது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் 2013க்கு பிறகு 7 வருடங்கள் கழித்து இப்போதுதான் சீனாவின் போர் கப்பல்கள் ஜப்பான் எல்லைக்குள் இப்படி நுழைகிறது. ஜப்பானை இது கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

    வேறு எங்கு

    வேறு எங்கு

    அதேபோல் சேனகாகு தீவுகளில் ஜப்பான் - சீனா இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. அந்த தீவை மொத்தமாக ஆக்கிரமிக்க சீனா திட்டமிட்டு வருகிறது. அங்கு எப்போது வேண்டுமானாலும் சீனா படைகளை குவிக்கலாம் என்று கூறுகிறார்கள். அதேபோல் ஆசியாவில் இருக்கும் வேறு சில வியட்நாம் போன்ற நாடுகள். அந்த பக்கம் இருக்கும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளையும் சீனா தேவையில்லாமல் சீண்டி வருகிறது.

    என்ன பதில்

    என்ன பதில்

    இந்த நிலையில்தான் சீனாவிற்கு எதிராக உலக நாடுகளை ஒன்று திரட்ட ஜப்பான் முடிவு செய்துள்ளது. இதற்காக ஏசியன் (ASEAN) குழுவில் இருக்கும் நாடுகள் மற்றும் சீனாவிற்கு எதிராக இருக்கும் நாடுகள் உடன் ஜப்பான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏசியன் (ASEAN) என்பது இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, மியான்மர், புருனோய், லாவோஸ் ஆகிய நாடுகள் கொண்ட கூட்டமைப்பு ஆகும்.

    சீனாவிற்கு கண்டனம்

    சீனாவிற்கு கண்டனம்

    இந்த குழுவில் இருக்கும் 10 நாடுகளும் சீனாவின் எல்லை மீறிய லடாக் தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. சீனா ஆசியாவில் இருக்கும் நாடுகளை அச்சுறுத்தி வருவதாக ஏசியன் (ASEAN) நாடுகள் கடும் குற்றஞ்சாட்டி இருந்தது. இந்த நிலையில் ஏசியன் (ASEAN) குழுவில் இருக்கும் நாடுகள் அனைத்தையும் அப்படியே சீனாவிற்கு எதிராக திசை திருப்ப ஜப்பான் முடிவு செய்துள்ளது .

    வேறு சில நாடுகள்

    வேறு சில நாடுகள்

    அதேபோல் ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளையும் சீனாவிற்கு எதிராக திரட்ட ஜப்பான் முயன்று வருகிறது.இதற்கு Quad என்று பெயர். சீனாவிற்கு எதிராக குவாட் நாடுகள் ஒன்றாக சேர்வதற்கான ஆயத்தமாக இருக்கிறது. அனைத்து நாடுகளையும் ஒன்றாக திரட்டி சீனாவிற்கு எதிராக ராஜாங்க ரீதியாக மற்றும் ராணுவ ரீதியான அழுத்தங்களை கொடுக்க ஜப்பான் முடிவு செய்து உள்ளது.

    பேசி வருகிறது

    பேசி வருகிறது

    இந்தோ - பசிபிக் கடலில் மொத்தமாக அமைதியை கொண்டு வரும் வகையில் ஜப்பான் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளது என்று கூறுகிறார்கள். இதற்காக ஜப்பான் மொத்தமாக தனது வெளியுறவுத்துறையை மாற்ற போகிறது என்றும் கூறுகிறார்கள். ஆம் தனது வெளியுறவுத்துறை அமைச்சகத்தை உலக நாடுகள் உடன் எளிதாக பேசும் வகையில் விரிவுபடுத்த போகிறது. இதற்காக புதிய குழுவை ஜப்பான் உருவாக்க போகிறது.

    மாஸ்டர் பிளான்

    மாஸ்டர் பிளான்

    இந்த குழுவில் இருக்கும் உறுப்பினர்கள் வரும் நாட்களில் உலக நாடுகள் உடன் சென்று பேச்சுவார்த்தை நடத்துவார்கள். ஏற்கனவே ஜப்பானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இது தொடர்பாக தீவிரமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் உடனும் அமெரிக்கா உடனும் அவர் பேசினார். மற்ற சில நாடுகள் உடனும் அவர் போனில் பேச இருக்கிறார் என்கிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+