Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஓசி சோறு".. டெலிவரி நிறுவனத்தை 1,095 முறை ஏமாற்றி ரூ.21 லட்சத்துக்கு உணவு சாப்பிட்ட நபர்.. சிக்கியது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டோக்கியோ: ஜப்பானில் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தை நூதன முறையில் ஏமாற்றி கடந்த 2 ஆண்டுகளாக 1,095 முறை உணவு ஆர்டர் செய்து ரூ.21 லட்சத்துக்கு சாப்பிட்ட நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த நூதன மோசடி குறித்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது நம்மில் பலரும் வீட்டில் இருந்தே தேவையான உணவுகளை ஆன்லைன் செயலியில் ஆர்டர் செய்து இருக்கும் இடத்தில் இருந்தே சுவைத்து வருகிறோம். இதற்கென பிரத்யேகமான சேவைகளை பல நிறுவனங்கள் வழங்கி வருகிறது. அமேசான், சோமட்டோ உள்பட பல நிறுவனங்கள் இந்த சேவையை நம் நாட்டில் வழங்கி வருகின்றன.

japanese-38-year-old-man-cheats-delivery-platform-into-giving-him-food-worth-rs-21-lakh-for-free-for
Photo Credit:

அதேபோல் வெளிநாடுகளிலும் இத்தகைய சேவைகள் உள்ளன. இந்நிலையில் தான் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனத்தை ஏமாற்றி கடந்த 2 ஆண்டுகளில் ரூ.21 லட்சத்துக்கு உணவு வாங்கி சாப்பிட்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்துள்ளது. அந்த நபர் யார்? அவர் எப்படி ஏமாற்றினார்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

ஆன்லைனில் உணவு

ஜப்பானில் நகோயா நகரை சேர்ந்தவர் டகுயா ஹிகாஷிமோடா. இவருக்கு வயது 38. இவர் வேலையின்றி இருக்கிறார். இதனால் தனது அன்றாட உணவு தேவையை அவரால் பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் அவர் நூதன முறையில் மோசடி செய்து தான் விரும்பும் உணவுகளை வீட்டில் இருந்தே ‛ஓசி'யில் கடந்த 2 ஆண்டுகளில் வீட்டில் இருந்தே சுவைத்துள்ளார். அதாவது ஜப்பானில் demae-can எனும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது.

மோசடியை எப்படி செய்தார்?

டகுயா இந்த நிறுவனத்தின் செயலியை பயன்படுத்தி தனக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் செய்வார். அதற்கான பணத்தையும் செயலி வழியாக செலுத்துவார். பிறகு அந்த உணவுகளை டெலிவரி பாய் வீட்டுக்கு வந்து கொடுப்பார். அதனை வாங்கி சாப்பிடும் டகுயா, அதன்பிறகு ‛‛நான் ஆர்டர் செய்த உணவு இன்னும் வரவில்லை. பணத்தை திரும்ப தாருங்கள்'' என்று டெலிவரி நிறுவனத்தின் சேவை மையத்தை தொடர்பு கொள்வார்.

2 ஆண்டுகள் மோசடி

டெலிவரி நிறுவனமும் வாடிக்கையாளர்கள் தான் முக்கியம் என்ற அடிப்படையில் டகுயா ஆர்டர் செய்த உணவுக்கான பணத்தை திரும்ப வழங்குவார்கள். இதன்மூலம் டகுயா தனக்கு பிடித்த உணவுகளை சாப்பிட்டதோடு, அதற்கு வழங்கிய பணத்தையும் மீண்டும் டெலிவரி நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளார். இப்படியாக கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை டகுயா மோசடி செய்து சாப்பிட்டுள்ளார்.

ரூ.21.10 லட்சம் மோசடி

இந்த காலக்கட்டத்தில் அவர் மொத்தம் 1,095 முறை மோசடி செய்து 3.7 மில்லியன் யென் பணத்தை திரும்ப பெற்றுள்ளார். இதன் இந்திய மதிப்பு ரூ.21.10 லட்சமாகும். மேலும் இந்த மோசடியை அரங்கேற்ற அவர் போலியான சிம்கார்டுகள், போலி முகவரி மற்றும் போலி பெயர்களை பயன்படுத்தி உள்ளார். ஒவ்வொரு சிம் கார்டுகளை பயன்படுத்தும்போதும் போலி முகவரியை பயன்படுத்தி உணவு ஆர்டர் செய்து மோசடி செய்துள்ளது. இவர் contactless delivery option என்பதை தொடர்பு கொண்டு கைவரிசை காட்டி உள்ளார். இவருக்கு அந்த செயலியில் மொத்தம் 124 அக்கவுண்ட் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிக்கியது எப்படி?

கடந்த ஜூலை 30 ம் தேதி டகுயா வழக்கம்போல் உணவு ஆர்டர் செய்து அதனை சாப்பிட்டார். பெண்டோ மற்றும் சிக்கன் ஸ்டிக்ஸ் (Bento and chicken steaks) ஆர்டர் செய்தார். அதனை சாப்பிட்ட பிறகு அவர் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு போன் போட்டு பேசவில்லை. மாறாக சாட் செய்தார். தான் ஆர்டர் செய்த உணவை அவர் சாப்பிட்டாலும் கூட அந்த உணவு வரவில்லை என்று கூறி பணத்தை திரும்ப கேட்டார். அவருக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டது.

அப்போது dema-can நிறுவனத்துக்கு சந்தேகம் எழுந்தது. அவர்கள் விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையின்போது தான் டகுயாவின் மோசடி தெரியவந்தது. அவர் மொத்தம் ரூ.21.10 லட்சம் வரை உணவு சாப்பிட்டு பணமோசடி செய்தது அம்பலமானது. இதையடுத்து டெலிவரி நிறுவனம் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகாரை தொடர்ந்து டகுயாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

இத்தகைய மோசடியால் தற்போது டெலிவரி நிறுவனம் சுதாரிக்க தொடங்கி உள்ளது. அதன்படி அந்த ஆன்லைன் டெலிவரி நிறுவனம் ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் முகவரி, செல்போன் எண் உள்பட பிற விவரங்களை முன்கூட்டியே சரிபார்க்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+