Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஆபரேஷன் சிந்தூர்".. தப்பிய பயங்கரவாதி மசூத் அசாருக்கு ரூ.14 கோடி வழங்கும் பாக்., அரசு! ஷாக் தகவல்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக நம் நாடு ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் புகுந்து அடித்தது. நம் நாட்டின் ஏவுகணைகள் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள், 3 விமானப்படை தளங்களை அழித்தது. இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது பயங்கராத அமைப்பின் தலைவர் மசூத் அசார் தப்பினார். ஆனால் அவரது அக்காள், மருமகன், மருமகள் உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 10 பேர், நெருக்கமான உறவினர்கள் 4 பேர் என்று மொத்தம் 14 பேர் இறந்த நிலையில் தான் பாகிஸ்தான் அரசு பயங்கரவாதி மசூர் அசாருக்கு ரூ.14 கோடி வழங்க உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான கடும் மோதல் என்பது முடிவுக்கு வந்துள்ளது. எல்லையில் அமைதி திரும்பி உள்ளது. இருப்பினும் நம் நாடு உஷாராக இருந்து வருகிறது. பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாதிகள், ராணுவத்தை வைத்து தாக்கலாம் என்பதால் எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

pakistan masood azar india

இதற்கிடையே தான் தற்போது பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது நம் நாட்டில் பல்வேறு சதி வேலைகளை செய்து வந்த பாகிஸ்தான் பயங்கரவாதியும், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவருமான மசூத் ஆசாருக்கு பாகிஸ்தான் அரசு ரூ.14 கோடியை வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றிய விபரம் வருமாறு:

கடந்த மாதம் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இது லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பாகும்.இந்த தாக்குதலுக்கு நம் நாடு பதிலடி கொடுத்தது. முறையாக திட்டமிட்டு காத்திருந்து கடந்த 7ம் தேதி இந்த பதிலடி கொடுக்கப்பட்டது.

‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் ஏவுகணைகளை பாகிஸ்தானுக்குள் ஏவி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மொத்தம் 9 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. அதில் மிகவும் முக்கியமான இடம் என்பது பாகிஸ்தானின் பஹவால்பூரில் நடத்தப்பட்ட தாக்குதலாகும். அதாவது பஹவால்பூரில் உள்ள ஜாமியா மஜ்ஜித் சுபான் அல்லா என்ற இடத்தில் நம் நாடு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த இடம் என்பது ஜம்மு காஷ்மீரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதோடு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைமையிடமாக செயல்பட்டது.

இங்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் மற்றும் அவரது குடும்பத்தினர் வசித்து வந்தனர். இங்கு பயங்கரவாத பயிற்சி பலருக்கும் கொடுக்கப்பட்டது. இதனால் நம் நாடு இந்த இடத்தை குறிவைத்து அடித்தது. இதில் இந்த தாக்குதலில் மசூத் அசார் தப்பினார். அதேவேளையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் வரை பலியாகினர். மசூத் அசாரின் அக்காள், அவரது கணவர், மசூத் அசாரின் மருமகன், அவரது மனைவி, மருமகள், 5 குழந்தைகள் என்று 10 பேர் பலியாகினர். இவர்கள் தவிர மசூத் அசாரின் நெருங்கிய கூட்டாளியும் உறவினர்களுமான 3 பேரும், அதில் ஒருவரின் தாயாரும் அடங்குவர். இதன்மூலம் மசூத் அசார் தனக்கு நெருக்கமான மொத்தம் 14 பேரை இழந்தார்.

இதற்கிடையே நம் நாட்டின் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பலியானவர்களின் குடும்பத்துக்கும் தலா ரூ.1 கோடி நிவாரணம் அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார். அதன்படி பார்த்தால் மசூத் அசார் மொத்தம் 14 பேரை இழந்துள்ளனர். இதில் இறந்தவர்களுக்கு பிற வாரிசுகள் இல்லை என்று கூறப்படும் நிலையில் அவர்களுக்கான நிவாரணமான ரூ.14 கோடி மசூத் அசாருக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்தியாவின் தாக்குதலில் சேதமான பொதுமக்களின் வீடு, மசூதிகளை மீண்டும் கட்டி கொடுப்பதாகவும் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இப்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதாவது ‛ஆபரேஷன் சிந்தூர்' பெயரில் நம் நாடு நடத்திய துல்லியமான தாக்குதலில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மட்டுமே அழிக்கப்பட்டன. 80க்கும் அதிகமான பயங்கரவாதிகள் மட்டுமே இறந்தனர். அப்பாவி மக்கள் யாரும் சாகவில்லை. இப்படியான சூழலில் பயங்கரவாதிகளை பொதுமக்கள் என்று கூறி பாகிஸ்தான் கட்டுமான பணிகளை செய்து தருவதாக கூறியுள்ளது. அதன்படி பாகிஸ்தானில் அழிக்கப்பட்ட 9 பயங்கரவாதிகளின் முகாம்களும் மீண்டும் கட்டப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது நம் நாட்டுக்கும் பிரச்சனையாக மாறலாம். ஏனென்றால் மீண்டும் அங்கு பயங்கரவாதிகள் முகாம்களாக பயன்படுத்தலாம் என்பதால் பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை நம் நாடு உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+