வீதி முழுக்க ஓடிய ரத்தம்.. தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு.. 9 பேர் உயிரிழப்பு & பலர் படுகாயம்
ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் மிக மோசமான துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அங்குள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர். அங்கு மதுபானக் கடைக்குள் புகுந்த மர்ம நபர் சரமாரியாகச் சுட்டதில் 9 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் அங்கு நாடு முழுக்க பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரின் புறநகர்ப் பகுதியில் இன்று மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. அருகே உள்ள ஒரு மதுபானக் கடைக்குள் உள்ளூர் நேரப்படி அதிகாலை நேரத்தில் புகுந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார்.

அங்கிருந்த அனைவரையும் நோக்கி அந்த மர்ம நபர் தாறுமாறாகச் சுட்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், பலர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் அருகே உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி சூடு குறித்த தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர். இருப்பினும், அதற்குள் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் தப்பித்துச் சென்றுவிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் போலீசார் இறங்கியுள்ளனர். துப்பாக்கி சூட்டை நடத்தியவர்களைப் பிடிக்கும் பணிகளும் போலீசார் இறங்கியுள்ளனர்.
இந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இதுவாகும். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்ஸ்டா முதல் யூடியூப் வரை எல்லாவற்றுக்கும் தடை.. 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரிட்டன் அதிரடி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு












Click it and Unblock the Notifications