சூப்பரப்பு... பினாங்கு நைனா ரொட்டி கடையின் சுவரில் வசீகரிக்கும் 'கபாலி'!
Subscribe to Oneindia Tamil
பினாங்கு: திரும்பிய திசையெங்கும் ரஜினிகாந்தின் கபாலியின் தாக்கம்தான்.... மலேசியாவின் பினாங்கு நகரின் புகழ்பெற்ற சுவர் ஓவியத்திலும் அச்சு அசல் கபாலி அசத்துகிறார்...
பினாங்கு நகரத்தில் உள்ள டிரான்ஸ்பர் சாலையில் "நைனா ரொட்டி பக்கர் கடையில்" ரஜினிகாந்தின் கபாலி தோற்றம் வரையப்பட்டுள்ளது.

வெள்ளைத் தாடி சகிதம் வெள்ளை நிற கோர்ட்டுடன் ரஜினிகாந்த் பாதி வெந்த முட்டையோடு ரொட்டி பக்கர் சாப்பிடுவது போல அந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது. நாம் சாப்பிடும்போது ரஜினி அருகே அமர்ந்திருப்பது போன்ற உணர்வைத் தருகிறது அந்த ஓவியம்.
இச்சித்திரத்தை வரைந்தவர் அஸ்மி உசேன். இவரும் ரஜினியின் தீவிர ரசிகர்தானாம்.












Click it and Unblock the Notifications