சாத்தியமே இல்லை.. கச்சத்தீவை இந்தியாவுக்கு திரும்ப வழங்க முடியாது.. இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
கொழும்பு: கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்று இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். மேலும், கச்சத்தீவை திரும்ப வழங்கினால் இலங்கையின் கடல்வளம் சூறையாடப்படும் எனவும் தடாலடியாக கூறியுள்ளார்.
தமிழக அரசியலில் தற்போது கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விவாதப்பொருளாகியுள்ளது. இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு 1974ஆம் ஆண்டில் இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டது. கடந்த சில நாட்களாக மீண்டும் இந்த கச்சத்தீவு விவகாரம் பேசுபொருள் ஆகி இருக்கிறது.

கச்சத்தீவு விவகாரம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்களைப் பகிர்ந்து இருந்தார். இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடியும் கூட நேரடியாக எக்ஸ் பக்கத்தில் விமர்சித்து இருந்தார். கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், "காங்கிரஸ் செயல்பாடுகளாலேயே கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டதாக சாடினார்".
மேலும், அப்போது தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருந்த திமுகவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை என்றும் இது குறித்து மாநில அரசுக்குத் தேவையான தகவல்கள் பகிரப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் - திமுகவைக் கடுமையாகச் சாடினார். மத்திய அரசு கச்சத்தீவை மீட்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை அமைச்சர் பேட்டி: கச்சத்தீவு பிரச்சினைக்கு காங்கிரஸ், திமுகதான் காரணம் என்று பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது. பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜக, கச்சத்தீவை மீட்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் பதிலடி கொடுத்து வருகின்றன. தேர்தல் அரசியலுக்காக கச்சத்தீவு விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலினும் கடுமையாக சாடியிருந்தார்.
கச்சத்தீவு விவகாரம் மீண்டும் தமிழக அரசியலில் அனலை கிளப்பியுள்ள நிலையில், இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பரபரப்பு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். டக்ளஸ் தேவானந்தா கூறுகையில், 'கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது. இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவு கிடைக்கப்பெற்றது.
இலங்கை கடல் வளம் சூறையாடப்படும்: எனவே இதை திரும்ப வழங்குவது சாத்தியமற்றது. கச்சத்தீவை திரும்ப வழங்குவதாக இருந்தால் இலங்கையின் கடல் வளம் முற்றிலுமாக சூறையாடப்படும். இலங்கையில் இழுவை மடி படகு பயன்படுத்துவதற்கு தடை உள்ளது.
இந்திய மீனவர்கள் இழுவைமடி படகுகளை பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்ட விரோதமாக மீன் பிடிக்கின்றனர். இந்திய மீனவர்களால் இலங்கையின் கடல் வளம் அழிக்கப்படுகிறது. இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்களின் கடல் தொழில் உபகரணங்களும் சேதப்படுத்தப்படுகின்றன" என்றார்.
-
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications