For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கென்யா: "சோலை" நகரின் துயரத்தில் வெளிச்சத்துக்கு வரும் 'ஆதி தமிழர்' உறவு... ஆய்வுகள் விரிவடையுமா?

கென்யாவில் அணையின் சுவர்கள் வெடித்து வெள்ளம் பாய்ந்து பாதிக்கப்பட்ட நகரின் பெயர் சோலை.

By Mathi
Google Oneindia Tamil News

நைரோபி: கென்யாவில் அணையின் சுவர்கள் வெடித்து சுனாமியாக ஊர்களுக்குள் வெள்ளம் பாய்ந்தது என்பதுதான் செய்தி. ஆனால் செய்தியை சற்றே ஆழமாக படிக்க.. அங்கே காத்திருந்தது இன்ப அதிர்ச்சி.

இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்த இடத்தின் பெயர் 'Solai'. தமிழில் நாம் சோலை என்று குறிப்பிடப்படும் அப்படி ஒரு சோலைவனப்பகுதியாகத்தான் இந்த அணை உடைந்த இடமும் இருக்கிறது.

ஆப்பிரிக்காவில் ஆதி தமிழ்

ஆப்பிரிக்காவில் ஆதி தமிழ்

ஆப்பிரிக்க நாடுகளில் ஆதி மக்கள் பேச்சுவழக்கை சற்றே நின்று நிதானித்து கவனித்தால் அது தமிழின் ஆதி வடிவம் என்றே ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். காமரூன் நாட்டு மக்களின் பேச்சுகளை முன்வைத்து சில ஆண்டுகளுக்கு முன் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வெளியாகி இருந்தன.

கென்யாவின் சோலை

கென்யாவின் சோலை

ஆதி மனிதர்களின் தாயகம் ஆப்பிரிக்கா. அங்கு பேசப்பட்ட மொழியும் தமிழ்தான் என்பதைத்தான் இந்த வீடியோ ஆதாரங்கள் வெளிப்படுத்தியிருந்தன. அதனால் கென்யாவின் 'சோலை' நகர் நமக்கு ஆர்வத்தைத் தூண்டியது.

நை ஏரி தான் நைரோபியானதா?

நை ஏரி தான் நைரோபியானதா?

இணையத்தில் மேப்பில் தேடினால் சோலை ஸ்டோர்ஸ் என்பது போல சோலை என்கிற சொல் அந்த நகரத்தில் உயிர்ப்போடு பயன்படுத்தப்படுகிறது. அதேபோல் தலைநகர் நைரோபி என்ற பெயரே கூட அங்கே இருக்கும் நைஏரியின் (Nyeri) பெயரால் வந்திருக்கலாமோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

நைரோபாவில் ஆதி ஆறு

நைரோபாவில் ஆதி ஆறு

நைரோபி அருகே ஓடும் ஆற்றின் பெயர் Athi River - ஆதி ஆறு என்று இருந்திருக்கலாம். ஏற்கனவே சிந்து சமவெளி பகுதிகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரானில் பல ஊர்கள் தமிழ்ப் பெயர்களை கொண்டவை என சிந்துவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் நிரூபித்திருக்கிறார். ஆப்பிரிக்காவிலும் நமது ஆய்வுகள் விரிவடையும்போது ஆதி மனிதன் பேசிய மொழியே தமிழ் என்பதை நிரூபிக்க முடியும்.

English summary
Kenya Town name Solai has showed that Tamil Links.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X