பார்க்கத்தானே போறீங்க இந்த கிம் ஆட்டத்தை..அமெரிக்காவுக்கு சவால் விடும் கிம்? மிரட்டும் மெகா ஏவுகணை
பியோங்யாங் : ஒருவராலும் யாராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுத திறன்கள், அமோகமான இராணுவ பலம் ஆகியவை இருந்தால் மட்டுமே, ஏகாதிபத்தியவாதிகளின் அனைத்து அச்சுறுத்தல்களையும் கட்டுப்படுத்த முடியும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியிருப்பது உலக அளவில் பேசு பொருளாகியிருக்கிறது.
வியாழன் அன்று வடகொரியா இந்த ஆண்டில் 12வது முறையாக ஆயுத சோதனைகளை நடத்தியது. புதிதாக உருவாக்கப்பட்ட, நீண்ட தூர Hwasong-17 ஏவுகணை ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.
Hwasong-17 பிரம்மாண்ட ஏவுகணை அமெரிக்காவின் எந்த பகுதியிலும் அணு ஆயுத தாக்குதலை நடத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அமெரிக்கா எதிர்ப்பு குரல் கொடுத்தாலும் வழக்கம் போல் கின் ஜாங் உன் அதனை கண்டுகொள்ளவில்லை.

வாசோங் ஏவுகணை
Hwasong-17 ஏவுகணை நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 15,000 கிமீ (9,320 மைல்கள்) வரை பறக்க முடியும். மேலும் அமெரிக்காவின் நிலப்பகுதி மற்றும் அதற்கு அப்பாலும் சென்று தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை சுமார் 25 மீ (82 அடி) நீளம் கொண்டதாக கூறப்படும் நிலையில், Hwasong-17 உலகின் மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்பாக உள்ளது.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
இந்நிலையில் தான் ஒருவராலும் யாராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுத திறன்கள், அமோகமான இராணுவ பலம் ஆகியவை இருந்தால் மட்டுமே, ஏகாதிபத்தியவாதிகளின் அனைத்து அச்சுறுத்தல்களையும் கட்டுப்படுத்த முடியும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியுள்ளார். இதேபோல் பல சக்திவாய்ந்த ஆயுதங்களை வட கொரியா தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த வாரம் வாசோங் - 17 ஏவுகணையை தயாரித்த ஆராய்ச்சியாளர் குழுவை அதிபர் கிம் ஜோங் சந்தித்துப் பேசினார்.

சக்திவாய்ந்த ஆயுதங்கள்
அப்போது அவர்கள் மத்தியில் பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, மேலும் பல சக்திவாய்ந்த ஆயுதங்களை வட கொரியா தயாரிக்கும். அணு ஆயுதப் போர் மூண்டாலும், அதை தடுக்கும் வகையில், வட கொரியாவின் திறன் மேம்படுத்தப்படும் என்றார். ஒருவராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுதங்கள் திறன்கள், அமோகமான ராணுவ பலம் இருந்தால்தான், போரைத் தடுக்க முடியும், நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியும்.

அணு ஆயுத போர்
ஏகாதிபத்தியவாதிகளின் அனைத்து அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் கட்டுப்படுத்த முடியும் என்ற கிம், வட கொரியா இன்னும் "சக்தி வாய்ந்த தாக்குதல் வழிமுறைகளை" உருவாக்கும் என்றும், தனது நாடு "அணு ஆயுதப் போரைத் தடுப்பதை இன்னும் தீவிரமாகச் செய்யும்" என்று அவர் கூறியதாக KCNA செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications