குவைத் நாட்டில் ஈரானின் வெறியாட்டம்! விமான சேவை மொத்தமாக முடக்கம்.. ஜோர்டானில் மட்டும் 12 ஏவுகணைகள்
குவைத் நாட்டின் விமான சேவை வியாழக்கிழமை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஈரானின் அதிரடி தாக்குதல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக குவைத் நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் குவைத் நாட்டில் இருந்து வெளிநாட்டவர்கள் தாய் நாட்டிற்கு செல்ல முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளனர்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் 100 நாட்களை கடந்தாலும், கடந்த சில வாரங்களாக தாக்குதல் ஏதுமில்லாமல் பேச்சுவார்த்தை கட்டத்திலேயே இருந்தது. ஆனால் கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மூலம் மீண்டும் வளைகுடா பகுதியில் தாக்குதல்கள் துவங்கி தினமும் சைரன் சத்தம் கேட்டு வருகிறது.

குவைத் விமான சேவை முடக்கம்
இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த போர் வளைகுடா நாடுகள் முழுவதற்கும் வேகமாகப் பரவி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குவைத் நாட்டின் மீது ஈரான் நடத்திய அதிரடி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, குவேத்தின் சிவில் விமானப் போக்குவரத்து வாரியம் தனது நாட்டின் வான்வெளியைத் தற்காலிகமாக முழுமையாக மூடி உத்தரவிட்டுள்ளது.
இதனால் குவைத்திற்கு வர வேண்டிய மற்றும் அங்கிருந்து புறப்பட வேண்டிய அனைத்து சர்வதேச வணிக விமானங்களும் மாற்றுப் பாதைகளுக்குத் திருப்பி விடப்பட்டு, வளைகுடா பிராந்தியம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரான் தாக்குதல்கள்
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை படைப்பிரிவு அமெரிக்க படைகளுக்கு எதிராக பதில் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்கள் குவைத், பஹ்ரைன் மற்றும் ஜோர்டான் நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்டதாக ஈரான் செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதல்களில் சுமார் 18 இலக்குகளை ஈரான் தாக்கியுள்ளது. ஜோர்டானில் உள்ள அல் அஸ்ரக் விமான தளத்தில் அமெரிக்க போர் விமானங்களுக்கு எதிராக 12 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஈரான் தரப்பு கூறியுள்ளது. இதன் பாதிப்பு குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
குவைத் வான் பாதுகாப்பு நடவடிக்கை
குவைத் நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பல ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியுள்ளன. இந்த இடைமறிப்பு நடவடிக்கைகள் காரணமாக பல பகுதிகளில் ஏவுகணை வெடித்த சத்தம் கேட்டதாக குவைத் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சத்தம் அனைத்தும் வான் பாதுகாப்பு பிரிவுகளின் ஏவுகணை வானிலேயே இடைமறித்து நடத்தப்பட்ட தாக்குதலில் விளைவாக கேட்டுள்ளது, குவைத் அரசு இந்த நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பதில் தாக்குதல்
அமெரிக்க ராணுவத்தின் சென்ட்ரல் கமாண்ட் அமைப்பு ஈரானில் உள்ள பல இலக்குகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்கள் தற்காப்பு நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரான் தரப்பு இந்த தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று 3 நாட்களில் இருக்கும் அமெரிக்க தளத்தை தாக்கியுள்ளது. இந்த மோதல் காரணமாக பல நாடுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications