இந்திய பொருட்கள் வேண்டவே வேண்டாம்.. திடீரென தடை போட்ட கிர்கிஸ்தான்.. ஷாக் தகவல்
பிஷ்கேக்: நம் நாட்டில் இருந்து அமெரிக்கா உள்பட பல நாடுகளுக்கு பல்வேறு வகையான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் நம் நாட்டில் இருந்து பொருட்களை வாங்க திடீரென்று கிர்கிஸ்தான் நாடு தடை விதித்துள்ளது. இது நம் நாட்டின் வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த தடையின் பின்னணி குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதனால் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி குறைந்து நம் நாட்டின் வர்த்தகர்கள் மாற்று மார்க்கெட்டை தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் கிர்கிஸ்தான் நாடு திடீரென்று நம் நாட்டில் இருந்து வாங்கும் இறைச்சி மற்றும் மாடு, ஆடு, கோழி, பன்றகளின் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது.
கிர்கிஸ்தான் அறிவிப்பு
இதுதொடர்பாக கிர்கிஸ்தான் உணவு துறைக்கான அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதில், ‛‛இந்தியாவில் ‛நிபா' வைரஸ் பரவல் உள்ளது. இந்த ‛நிபா' வைரஸ் விலங்குகளிடம் இருந்து மமக்களுக்கு தொற்றும் அபாயம் உள்ளது. இதனால் வர்த்தகம் மற்றுமு் பயண விஷயங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய இறக்குமதிக்கு தடை
அதன்படி முன்னெச்சரிக்கையாக, இந்தியாவில் இருந்து வரும் இறைச்சி உள்பட விலங்குகளில் இருந்து கிடைக்கும் உற்பத்தி சார்ந்த பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி நம் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்ட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு வரும் மக்கள் பரிசோதனைக்கு பிறகு தான் அனுமதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு வருகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.
கிர்கிஸ்தான் - இந்திய வர்த்தக டேட்டா
இது நம் நாட்டுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. கிர்கிஸ்தானை பொறுத்தவரை நம் நாட்டிடன் பெரிய அளவில் வர்த்தகம் செய்யவில்லை. இருப்பினும் கணிசமான அளவில் வர்த்தகம் செய்கிறது. கடந்த 2024ம் ஆண்டில் இருநாடுகள் இடையே மொத்தம் 116 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. இதில் நம் நாடு தான் 89 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருட்களை கிர்கிஸ்தானுக்கு அனுப்பி வைத்தது.
இறைச்சி தான் அதிகம்
அதிலும் 7,21,119 டாலர் அளவுக்கு இறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டது. அதில் ஆடு, கோழி, பன்றி, மாட்டிறைச்சி உள்ளிட்டவை அடங்கும். மேலும் கிர்கிஸ்தான் நம் நாட்டின் பெரிய வர்த்தக நாடாக இல்லாவிட்டாலும் கூட தற்போது டிரம்பின் வரி விதிப்புக்கு மத்தியில் கிர்கிஸ்தான் நம் நாட்டின் பொருட்களை தடை செய்வது நம் நாட்டின் வர்த்தகர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். இதனால் கிர்கிஸ்தானின் இந்த முடிவு நம் நாட்டுக்கு பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
‛நிபா’ வைரஸ் பரவல்
தற்போது சீனா உள்பட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ‛நிபா' வைரஸ் பரவல் தொடங்கி உள்ளது. நம் நாட்டில் மேற்கு வங்க மாநிலத்தில் ‛நிபா' வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரை மேற்கு வங்கத்தில் நார்த் 25 பர்கானஸ் மாவட்டத்தில் 2 பேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களின் பிற விவரங்களை மத்திய அரசு தரவில்லை.
கட்டுக்குள் இருக்கும் வைரஸ்
மேலும் பாதிக்கப்பட்டவர்களுடன் 196 பேர் தொடர்பில் இருந்தனர். அவர்களுக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது. இது பெரிய நிம்மதியை தந்துள்ளது. தற்போது நாட்டில் ‛நிபா'வைரஸ் கட்டுக்குள் உள்ளது. தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் நம் நாட்டில் ‛நிபா’ வைரஸ் பாதிப்பால் அச்சமடையும் நிலை இல்லை.
எப்படி பரவும் - அறிகுறி என்ன?
இந்த ‛நிபா' வைரஸ் என்பது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸாகும். பழம் தின்னும் வவ்வால், குதிரைகள், நாய், பன்றிகள் உள்ளிட்டவற்றிடம் இருந்து மக்களுக்கு பரவும். அசுத்தமான தண்ணீர் வழியாகவும், ‛நிபா' வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பதன் மூலமாகவும் பரவும். இந்த வைரஸ் பாதிப்புக்கு தடுப்பூசி அல்லது பிரத்யேக சிகிச்சை என்பது கிடையாது.
‛நிபா' வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல் தலைவலி, வாந்தி, தூக்கமின்மை, மூச்சுத்திணறல், மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் இருக்கும். ‛நிபா' வைரஸ் 14 நாட்கள் வரை மனித உடலில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் மேற்கூறிய அறிகுறிகள் இருப்பின் உரிய சிகிச்சை பெற வேண்டும். ‛நிபா' வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் உடனடியாக தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications