For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காவில் உழைப்பாளர்கள் தினம்.. கண் கவர் கொண்டாட்டங்கள்

Google Oneindia Tamil News

சார்லட், அமெரிக்கா: அமெரிக்காவில் நடந்த உழைப்பாளர்கள் தின விழாவையொட்டி பல்வேறு நகரங்களில் கண்கவர் கொண்டாட்டங்கள் இடம் பெற்றன.

நம் நாட்டில் மே 1 ஆம் தேதியை உழைப்பாளர்கள் தினமாகக் கொண்டாடி உழைப்பையும் உழைக்கும் உழைப்பாளர்களையும் பெருமைப்படுத்துகிறோம். அது போல அமெரிக்காவில் உழைப்பாளர்கள் தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் முதல் திங்கள்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் அனைத்துத் துறைகளிலும் உள்ள உழைப்பாளிகளின் பங்களிப்பு நினைவுகூரப்படுகிறது. இது உழைப்பாளர்களை பெருமைப்படுத்தும் ஒரு தினமாகப் பார்க்கப்படுகின்றது.

 கோடை காலத்தின் கடைசி நாளில்

கோடை காலத்தின் கடைசி நாளில்

மேலும் இந்த உழைப்பாளர்கள் தினமானது, அங்கு கோடை காலத்தின் கடைசி நாளாகவும் கருதப்படுகிறது. இதற்கு அடுத்த நாள் அங்குள்ள பள்ளிகள் அனைத்தும் விடுமுறை முடித்து துவங்குகின்றன. 1896 ஆம் ஆண்டு முதல் உழைப்பாளர்கள் தினம் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு அந்த முதல் உழைப்பாளர்கள் தின கொண்டாட்டத்தின் போது எவ்வாறு இத்தினத்தை கொண்டாடலாம் என்று வகுக்கப்பட்டது.

 உற்சாகப் பேரணி

உற்சாகப் பேரணி

உற்சாகமான பேரணிகள் நடத்திக் கொண்டாட முடிவு செய்தனர் இவ்வாறு நடத்தப்படும் பொது அணிவகுப்பில் உழைப்பாளர்கள் யூனியனின் உற்சாகமும் உறுதியும் பொது மக்களுக்கு பறைசாற்றப்படுகின்றன. இந்த வருடம் நடைபெற்ற அமெரிக்காவின் சார்லட் நகரத்தில் நடைபெற்ற உழைப்பாளர்கள் தின பேரணிகள் ஊர்வலங்கள் கொண்டாட்டங்களின் புகைப்படங்கள் உங்களுக்காக.

மோட்டார் சைக்கிள்கள் அணிவகுப்பு

மோட்டார் சைக்கிள்கள் அணிவகுப்பு

இது கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட, மோட்டார் சைக்கிள்களின் அணிவகுப்பு.

கறுப்புக் கொடி அணிவகுப்பு

கறுப்புக் கொடி அணிவகுப்பு

கறுப்பு உடையில் பேரணியில் கலந்து கொண்டு பேனர்களுடன் அணிவகுத்த பேரணியாளர்கள்.

அய்.. நாய்க்குட்டி!

அய்.. நாய்க்குட்டி!

மனிதர்கள் மட்டுமா உழைக்கிறார்கள். இந்த நாய்க்குட்டியாரும் கூடத்தான். என்னா அழகா நடக்குது பாருங்க!

இசை முழக்கத்தோடு

இசை முழக்கத்தோடு

இசை முழக்கத்தோடு பேரணியில் அணிவகுத்து இசை உணர்வுடன் நடைபோடும் மக்கள்.

சிகப்பு பலூன்களோடு அணிவகுப்பு

சிகப்பு பலூன்களோடு அணிவகுப்பு

சிவப்பு நிற பலூன்களோடும், தள்ளுவண்டியில் கலந்து கொண்ட குழந்தைகளுடனும் பேரணியில் பங்கேற்ற மக்கள்.

சிறுமியின் சிரிப்பு

சிறுமியின் சிரிப்பு

பேரணியில் கலந்து கொண்ட ஒரு குட்டி பாப்பாவின் ஸ்மார்ட் சிரிப்பு.

டிரக் வாகனத்தில் அணிவகுப்பு

டிரக் வாகனத்தில் அணிவகுப்பு

அலங்கரிக்கப்பட்ட டிரக் வாகனத்தில் அணிவகுக்கும் மக்கள்.

 சைக்கிள் சாகசங்கள்

சைக்கிள் சாகசங்கள்

நம்ம ஊர் போல இங்கும் கூட உண்டு சைக்கிள் சாகசங்கள்.

பொம்மையோடு சைக்கிள்

பொம்மையோடு சைக்கிள்

சைக்கிள் ஓட்டும்.. கூடவே பொம்மையும்.

செய்தி + படங்கள்: யாழினி வளன்

English summary
Labour day was celebrated in Charlotte, US. Here are some of the clicks and the story from our reader Yazhini Valan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X