பிரபுல் படேலுக்கு எதிர்ப்பு- லட்சத்தீவு பாஜகவில் பிளவு- லோக்சபா தேர்தலில் கிடைத்த 125 ஓட்டும் அம்போ!
கரவெட்டி: லட்சத்தீவுகளின் மத்திய அரசு நிர்வாகியான பிரபுல் கோடா படேலின் நடவடிக்கைகளுக்கு உள்ளூர் பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனா லட்சத்தீவுகளில் பாஜக இரண்டாக பிளவுபட்டுள்ளது.
Recommended Video
லட்சத்தீவுகளில் மத்திய அரசு அதிகாரியாக பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டார். குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது அமைச்சராக இருந்தவர் பிரபுல் படேல் (பிரபுல் பட்டேல்).

அடக்குமுறை
லட்சத்தீவுகளுக்கு பொறுப்பேற்றது முதல் இதுவரை இல்லாத வகையில் கடும் அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளார் பிரபுல் படேல். இதனால் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

பாஜகவில் எதிர்ப்பு
லட்சத்தீவு பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளும் கூட பிரபுல் படேலின் இந்த நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகத் தொடங்கி உள்ளன. லட்சத்தீவு பாஜக தலைவராக உள்ள அப்துல் காதர் ஹாஜ், பிரபுல் படேல் நடவடிக்கைக்கு ஆதரவாக உள்ளார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் லட்சத்தீவுகள் தொகுதியில் போட்டியிட்டு வெறும் 125 வாக்குகள் பெற்றவர்தான் இந்த அப்துல் காதர் ஹாஜி.

படேல் ஒரு சர்வாதிகாரி
ஆனால் மற்றொரு பாஜக தலைவரான அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஹாசிம் உள்ளிட்டோர் பிரபுல் படேலின் நடவடிக்கையை கடுமையாக விமர்சிக்கின்றனர். பிரபுல் படேல் ஒரு சர்வாதிகாரியாக நடந்து கொள்வதாகவும் காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும் பிரபுல் படேலுக்கு எதிராக பாஜக நிர்வாகிகள் போராட்டம் நடத்தி இருக்கின்றனர்.

பாஜகவுக்கு சொற்ப ஓட்டுகள்
இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக உள்ள லட்சத்தீவுகளில் மாட்டிறைச்சி தடை, குண்டர் சட்டம் அமல் போன்றவைதான் பெரும் கொந்தளிப்புக்கு காரணம். லட்சத்தீவு லோக்சபா தொகுதிகளில் பாஜக 200க்கும் குறைவான வாக்குகளைத்தான் இதுவரை பெற்றுள்ளது.

கேரளாவிலும் விழும் அடி
தற்போது மிக மோசமாக செயல்படுத்தப்பட்டும் இந்த நடவடிக்கைகளால் பாஜகவுக்குக் கிடைக்கக் கூடிய நூற்று சொச்சம் ஓட்டுகளுக்கும் பிரபுல் படேல் வேட்டுவைத்துவிட்டுதான் போவார் என குமுறுகின்றனர் பாஜகவினர். லட்சத்தீவுகளில் மட்டுமல்ல.. கேரளாவில் முட்டி மோதி காலூன்ற துடிக்கும் பாஜகவுக்கு இந்த நடவடிக்கைகள் மிக மோசமான பின்னடைவுதான் என்கின்றனர் அக்கட்சியின் மூத்த தலைவர்கள்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications