இப்படை தோற்பின் எப்படை வெல்லும்... விவசாயிகளுக்காக லாஸ் வேகாஸில் திரண்ட தமிழர்கள்!
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் திரண்ட தமிழர்கள் போராட்டம் நடத்தினர்.
லாஸ் வேகாஸ்: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் அங்கு வாழும் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். இதில் ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டனர்.
வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் 28வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை பிரதமர் மோடி இதுவரை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். இப்படை தோற்பின் எப்படை வெல்லும் என்பது போல் லாஸ் வேகாஸில் திரண்ட தமிழ் மக்கள் விவசாயிகளுக்காக தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
அப்போது விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் பலதிட்டங்கள் பற்றி லாஸ்வேகாஸ் தமிழ்ச்சங்கத்தில் ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக விவசாயம் பற்றிய விழிப்புணவு, நீர்வளம், நிலவளம், நஞ்சை, புஞ்சை, ரசாயனமற்றசாகுபடி, சொட்டுநீர் பாசனம் மற்றும் விவசாயிகள் பொருளுதவி திரட்டல் பற்றி லாஸ் வேகாஸ் தமிழ் மக்கள் தங்கள் கருத்தினை போராட்டத்தின் வாயிலாக தெரிவித்தனர்.
உழவினார் கைம்மடங்கின் இல்லைவிழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கும் நிலை.
என்ற திருக்குறளையும் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தின் போது தமிழ் மக்கள் தெரிவித்தனர். அப்போது விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதாகைகளையும் அவர்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications