மூக்குமுட்ட குடித்துவிட்டு காரை ஓட்டினால் தண்டனை இதுதான்.. அரசு உத்தரவால் அதிர்ந்த மக்கள்.. போச்சுடா
ஒருவர் சராசரியான வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தால் அவருக்கான விபத்து வாய்ப்புகள் குறைவு. ஆனால், சராசரி வேகத்தை 1% அதிகரிக்கும்போது விபத்துக்கான வாய்ப்பு 4% அதிகரிக்கிறது.
ரீகா: லாத்வியா நாட்டில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிராக சில கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், இனி குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டு அது உக்ரேனிய ராணுவத்தினருக்கு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளில் சுமார் 10.3 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக இரண்டு விஷயங்கள் சொல்லப்படுகிறது. ஒன்று அதிவேகம், மற்றொன்று குடி போதை.
ஒருவர் சரசரியான வேகத்தில் சென்றுக்கொண்டிருந்தால் அவருக்கான விபத்து வாய்ப்புகள் குறைவு. ஆனால், சராசரி வேகத்தை 1% அதிகரிக்கும்போது விபத்துக்கான வாய்ப்பு 4% அதிகரிக்கிறது. இதே குடிபோதையில் வாகனம் ஓட்டும்போது இந்த வாய்ப்பு இரண்டு மடங்காக அதிகரிக்கிறது.
இப்படி இருக்கையில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் லாத்வியா நாடு மேற்கொண்டு வருகிறது. இதற்கு கடந்த ஆண்டு புதிய சட்டத்தையும் இயற்றியது. அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை குறைந்த விலைக்கு ஏலம் விடப்பட்டன. இவ்வாறு 250 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நாட்டில் மொத்தமே சுமார் 18 லட்சம்பேர்தான் வாழ்கிறார்கள். எனவே இந்த 250 எண்ணிக்கை இந்நாட்டிற்கு மிக அதிகம்.

புதிய சட்டம்
ஆனால் இவ்வளவு கடுமையான சட்டங்கள் போடப்பட்டாலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. எனவே இதற்கு முன்னர் போட்ட சட்டங்கள் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று புதிய சட்டங்களை அந்நாட்டு அரசு போட்டிருக்கிறது. கடந்த 13ம் தேதி பத்திரிகையாளர்களை சந்தித்த அந்நாட்டு பிரதமர், கிரிஸ்ஜானிஸ் கரின்ஸ், "இனி குடித்துவிட்டு கார் ஓட்டுபவர்களின் கார்கள் பறிமுதல் செய்யப்படும். இந்த கார்கள் உக்ரைன் ராணுவனத்தினருக்கு வழங்கப்படும்" என்று கூறியுள்ளார். இவ்வாறு பறிமுதல் செய்யப்படும் கார்கள் அதிக அளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சீனாவில்
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு இதுபோன்று வித்தியாசமான தண்டனை லாத்வியாவில் மட்டும் வழங்கப்படுவதில்லை. சீனாவிலும் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ரத்தத்தில் ஆல்கஹால் அளவு 0.02லிருந்து 0.08% வரை இருந்தால் 6 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். இதே 0.08%க்கு அதிகமாக இருந்தால் 3 ஆண்டுகள் சிறையும், 5 வருடங்களுக்கு ஓட்டுநர் உரிமமும் ரத்து செய்யப்படும். அதேபோல ரூ.9,500லிருந்து ரூ.19 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக குடிபோதையில் அதிக விபத்துக்கள் நடந்துள்ளதால் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர்
சீனாவை தொடர்ந்து, பிரேசிலில் 0.006% அளவு ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருந்தால் 12 மாதங்கள் வரை ஓட்டுநர் உரிமைம் ரத்து செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும். இதே ஆல்கஹால் அளவு 0.06%க்கும் அதிகமாக இருப்பின் சம்பந்தப்பட்ட நபருக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். இங்கு சுமார் ரூ.20, ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். சிங்கப்பூரில் 0.09% வரை ஆல்கஹால் கலந்திருந்தால் அவர்களுக்கு ரூ.9,500 முதல் ரூ.19 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், 1-3 ஆண்டுகள் வரை ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

தமிழ்நாடு
இதே ஆல்கஹால் அளவு 0.09%க்கும் அதிகமாக இருப்பின் அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதமும் 6 முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும். தமிழ்நாட்டை பொறுத்த அளவில், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.2,000 அபராதமாக இருந்தது. ஆனால் இந்த அபராதத்தொகை தற்போது ரூ.20 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை கட்ட தவறினால் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications