நெடுஞ்சாலையில் கரன்சி மழை.. வழியெங்கும் சிதறிய ரூபாய் நோட்டு.. வண்டியை நிறுத்தி அள்ளிய மக்கள்
Recommended Video
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜார்ஜியாவில் திறந்திருந்த லாரியிலிருந்து பண மழை பெய்தது. இதை அப்பகுதி வழியாக வந்த வாகன ஓட்டிகள் ஆர்வமுடன் எடுத்தனர்.
ஜார்ஜியாவில் ஒரு நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த லாரியின் திறந்திருந்த கதவுகள் மூலம் பண மழை கொட்டியது.
இதை அப்பகுதி வழியாக வாகனம் ஓட்டி வருவோர் போவோர் என ஆச்சரியமுடன் பார்த்தனர். இந்த பண மழையை லாரி டிரைவர் கவனிக்காததால் அந்த பணத்தை எடுக்க மக்கள் விரும்பினர்.

பாதிப்பு
இதையடுத்து சாலை வழியாக 15-க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்திவிட்டு அதை ஓட்டி வந்தவர்கள் பணத்தை எடுக்கும் பணியில் மும்முரமாக இருந்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

1.75 லட்சம் டாலர்கள்
இதையடுத்து டன்வூட்டி போலீஸாருக்கு 911 பேர் போன் செய்து போக்குவரத்து நெரிசல் குறித்தும் கார்கள் வரிசை கட்டி நிற்பது குறித்தும் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், லாரியின் பக்கவாட்டு கதவு திறந்திருந்ததால் அதில் இருந்த 1.75 லட்சம் டாலர்கள் சாலையில் பறந்தன.

பணத்தை ஒப்படைக்க
இதையடுத்து நாங்கள் சென்ற பிறகு, அங்கிருந்த சில நூறு டாலர்களை நாங்களும், லாரியில் இருந்த டிரைவரும் மீட்டனர். எனினும் ஏராளமான பணத்தை மக்கள் எடுத்துக் கொண்டு விட்டனர். அந்த பணத்தை திருப்பித் தருமாறு மக்களிடம் கேட்டு கொண்டுதான் வருகிறோம்.

பாதசாரிகள்
அந்த பணம் அதுவாகவே பறந்து வந்திருந்தாலும் அதுவும் ஒரு திருட்டுதான் என்பதால் பணத்தை திரும்ப ஒப்படைக்க கோரியுள்ளோம். உயிரை பணயம் வைத்து இந்த பணத்தை வாகன ஓட்டிகள் எடுத்ததால் வாகன விபத்தோ பாதசாரிகளுக்கு பாதிப்போ ஏதும் ஏற்படவில்லை என்றனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications