திடீரென குலுங்கிய பூமி! இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்.. மக்கள் பீதி.. சுனாமி வார்னிங் இல்லை
சகார்த்தா: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் இன்று மாலை திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடு உள்ளிட்ட கட்டடங்கள் குலுங்கிய நிலையில் மக்கள் அவசரஅவசரமாக வெளியேறினர். ரிக்டர் அளவுகோலில் 7 என பதிவானதால் மக்கள் அச்சமடைந்துள்ள நிலையில் அதிர்ஷ்டவசமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் ஏற்படவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி, சிரியா நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து நடந்தன. இதனால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் சுமார் 55 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர். இதன் தொடர்ச்சியாக பல நாடுகளில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இருப்பினும் அதிர்ஷ்டவசமாக துருக்கி, சிரியாவில் ஏற்பட்டதுபோல் பயங்கர நிலநடுக்கம் பதிவாகவில்லை. சமீபத்தில் இந்தியாவில் கூட வடமாநிலங்களான பஞ்சாப், டெல்லி, உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்பட பல இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
அதேபோல் இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் இன்றும் இந்தேனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா தீவின் துபான் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு அலறியடித்து ஓடிவந்து பொதுவெளியில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் இந்த நிலநடுக்கம் அந்த நாட்டின் உள்ளூர் நேரப்படி மாலை 4:55 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் சுமார் 594 கிலோமீட்டர் அதாவது 370 மைல் ஆழத்தில் நிலை ஏற்பட்டுள்ளது. என இந்தேனேசியாவின் புவியியல் சார்ந்த கண்காணிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அந்த நாட்டின் பேரிடர் மீட்பு துறையின் செய்தி தொடர்பாளர் அப்துல் முகாரி கூறுகையில், ‛‛சுரபாயா, துபான், டென்பாசார் மற்றும் சீமராங் உள்ளிட்ட பகுதகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பூமிக்கடியில் ஆழமாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இருப்பினும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா? என கண்காணித்து வருகிறோம்'' என்றார்
மேலும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 என்ற அளவில் பதிவாகி உள்ளதாக அமெரிக்காவின் புவியில் ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுபற்றி அந்த மையம், ‛‛இந்தோனேசியாவின் இந்தோனேசியாவின் துபானுக்கு வடக்கே 96 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளது. மேலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டாலும் கூட அதிர்ஷ்டவசமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications