சிலிர்க்குதே.. இதுதான் உண்மை காதல்! ரூ.2,484 கோடியை விட்டுவிட்டு காதலனை திருமணம் செய்த மலேசிய பெண்
கோலாலம்பூர்: மலேசியாவின் காதலக்கு தந்தை எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ரூ.2,484 கோடி சொத்துகளை விட்டுவிட்டு காதலனை இளம்பெண் ஒருவர் கரம்பிடித்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அதோடு அவர்களின் காதல் பயணம் என்பது அனைவரையும் சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது. தற்போது இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த காதல் கதை குறித்த விபரம் வருமாறு:
காதல்.. இருமணங்களை இணைக்கும் 3 எழுத்து மந்திர சொல். இந்த பூமியில் பிறந்த அனைத்த உயிர்களுக்கும் காதல் பொதுவானதாக உள்ள காதல் மனிதர்களுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன? இல்லவே இல்லை என்பதை தான் இந்த உலகம் காலம் காலமாக நிரூபித்து வருகிறது. இன்றைய சூழலில் காதல் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

அதேவேளையில் காதலித்தவர்களை கரம்பிடிக்க முடியாமல் வேறு ஒருவரை திருமணம் செய்யும் சூழலையும் பல ஜோடிகள் எதிர்கொண்டு தான் வருகின்றன. இது மிகுந்த வலி நிறைந்தது என்றே காதல் கைகூடி, திருமணத்தை இணை சேர முடியாதவர்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான காதல் ஜோடிகள் திருமணத்தை கரம் கோர்காமல் போவதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் பணம். காதலன், காதலி இருவரும் சமஅந்தஸ்தில் இருக்கும்போது அவர்களின் காதல் பெரும்பாலும் திருமணத்தை முடிந்து விடுகிறது. மாறாக இருவரில் ஒருவரின் பொருளாதார சூழல் சற்று குறைவாக இருப்பின் பெற்றோர்கள் ஒப்புக்கொள்ளாத சூழல் தற்போதும் உள்ளது.
அந்த வகையில் இளம்பெண் ஒருவர் தனது காதலனை கரம்பிடிக்க வேண்டும் என்பதற்காக ரூ.2500 கோடி மதிப்பிலான சொத்துகளை உதறிதள்ளி உள்ளார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இது முற்றிலும் உண்மை. இந்த சம்பவம் எங்கு நடந்தது? காதலுக்காக ரூ.2,500 கோடி சொத்து வேண்டாம் எனக்கூறிய இளம்பெண் யார் என்பது பற்றிய விபரம் வருமாறு:
மலேசியாவை சேர்ந்தவர் கூ காய் பெங்க். மிகப்பெரிய தொழில் அதிபர். இவரது மனைவி பாலின் சாய். இவர் முன்னாள் மிஸ் மலேசியா அழகியாவார். இந்த தம்பதியின் மகள் ஏஞ்சலின் பிரான்சிஸ். கூகாய் பெங்க்-பாலின் சாய் தம்பதியின் ஒரே மகளாக ஏஞ்சலின் பிரான்சிஸ் உள்ளார். இவரது குடும்பத்தின் சொத்து மதிப்பு என்பது 300 மில்லியன் அமெரிக்க டாலராகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,500 கோடியாகும்.
இந்நிலையில் தான் ஏஞ்சலின் பிரான்சிஸ் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். இந்த வேளையில் அவருக்கு ஜெடியா பிரான்சிஸ் என்பவர் அறிமுகம் ஆனார். இருவரும் முதலில் நண்பர்களாகினர். அதன்பிறகு நட்பு என்பது காதலாக மாறியது. இருவரும் பரஸ்பரம் காதலிக்க தொடங்கினர். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதற்கிடையே தான் அவர்களின் காதலில் பூகம்பம் வந்தது. அதாவது ஏஞ்சலின் பிரான்சிஸ் குடும்பத்தினர் அவரது காதலை ஏற்கவில்லை. இதற்கு முக்கிய காரணம் காதலன் ஜெடியா பிரான்சிஸின் பொருளாதார நிலை என்பது ஏஞ்சலின் பிரான்சிஸை விட மிகவும் குறைவாகும். இதனால் காதலை கைவிடும்படி ஏஞ்சலின் பிரான்சிஸிடம் அவரது தந்தை கூறினார். ஆனால் அவர் காதலை விட்டு கொடுக்கும் மனநிலையில் இல்லை.
எந்த காரணத்தை கொண்டும் ஜெடியா பிரான்சிஸ் மீதான காதலை கைவிட மாட்டேன். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என அவர் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த அவரது தந்தை காதலை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்தை விட்டு வெளியேற வேண்டும். மேலும் குடும்பத்தின் சொத்தில் எந்த உரிமையும் கோரக்கூடாது. கோரினாலும் அது கிடைக்காது என தெரிவித்துள்ளார்.
இதனால் காதலனா? ஆடம்பர வாழ்க்கை வாழும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும் பெற்றோரா? என்ற முடிவை எடுக்க வேண்டிய சூழலுக்கு ஏஞ்சலின் பிரான்சிஸ் தள்ளப்பட்டார். இத்தகைய சூழலில் தான் ஏஞ்சலின் பிரான்சிஸ் துணிந்து ஒரு முடிவை எடுத்தார். அதாவது தனக்கு காதலன் ஜெடியா பிரான்சிஸ் தான் முக்கியம், ஆடம்பர வாழ்க்கையும், பெரும் சொத்துகளும் தேவையில்லை என அவர் முடிவு செய்தார்.
அதன்பிறகு அவர் முறைப்படி தனது குடும்பத்தினரிடம் இருந்து விலகினார். இதையடுத்து ஏஞ்சலின் பிரான்சிஸ்-ஜெடியா பிரான்சிஸ் ஜோடி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் என்பது கடந்த 2008 ல் நடந்தது. இதையடுத்து இருவரும் தங்களின் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியே மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே தான் ஏஞ்சலின் பிரான்சிஸ் தந்தை கூ காய் பெங்க் மற்றும் தாய் பாலின் சாய் ஆகியோரின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்தது.
இதில் கோர்ட்டு அழைப்பின் பேரில் ஏஞ்சலின் பிரான்சிஸ் விசாரணையில் பங்கேற்று தனது பெற்றோர் இடையேயான அழகிய உறவு பற்றி எடுத்துரைத்தார். தந்தை தொழிலை கவனித்த நிலையில் குடும்பத்தை தாய் கவனித்ததாக கூறி மலரும் நினைவுகளை பகிர்ந்தார். இந்த வேளையில் தான் ஏஞ்சலின் பிரான்சிஸ் தனது குடும்பத்தின் ரூ.2,484 கோடி சொத்தை புறம்தள்ளி காதலனை கரம்பிடித்த தகவல் தெரியவந்தது செய்திகளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications