தன்னுடைய டூத் பிரஷ்ஷால் கக்கூசை சுத்தம் செய்ததாக சந்தேகம்... மனைவியை குத்தி கொன்ற கணவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவில் உடம்பெல்லாம் குத்துப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில் கணவரே தனது மனைவியை டூத் பிரஸ்சை வைத்து குத்தி குத்தி கொடூரமாக கொன்றது தெரியவந்தது.

அமெரிக்காவின் மில்வாக்கி நகரத்தை சேர்ந்த யூஜின் மே ஃப்ளவர் என்பவர்தான் தனது மனைவியை கொலை செய்துள்ளார்.

Man kills own wife after she used his toothbrush to clean the toilet

மனைவியை கொன்றது ஏன் என்று போலீசார் விசாரணை நடத்தியபோது தனது மனைவி தான் பயன்படுத்தும் டூத் பிரஷை வைத்து கழிவறையை சுத்தம் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் கொன்றுள்ளார். யூஜினுக்கு எப்போதும் எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டும் என்ற ஒரு வியாதி உள்ளது. இதன் பெயர் ஒபிசிவ் கம்பல்சிவ் டிசார்டர்.

எப்போது பார்த்தாலும் வீடுகளை சுத்தம் செய்து கொண்டும், கைகளை சுத்தம் செய்து கொண்டும் இருப்பாராம்.
ஒருநாள் தனது டூத் பிரஸ்ஸை எடுத்து பார்த்த யூஜின், பாக்டீரியாக்களால் தனது டூத் பிரஸ் சூழப்பட்டிருப்பதாக குழம்பினார். இதனையடுத்து கோபத்துடன் யூஜின் அந்த டூத் பிரஷை கொண்டே கொடூரமாக தொண்டையில் தாக்கி, மனைவியின் பல்லை பலமுறை கழிவறையில் அடித்து கொலை செய்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்ததில் அந்த பெண்ணின் உடலில் 126 இடங்களில் காயம் இருந்ததாகவும், அந்த காயங்கள் டூத் பிரஷால் செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், யூஜினுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Mayflower admitted to killing his wife after he went “berserk” when he found out she had been cleaning the toilet with his own toothbrush for years.
Please Wait while comments are loading...