விமானத்தில் ‘தூங்கிய’ பெண்ணிடம் சில்மிஷம்... இந்திய வம்சாவளி தாத்தாவிற்கு 8 மாதம் சிறை
நியூயார்க்: விமானத்தில் பக்கத்து இருக்கையில் இருந்த பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இந்திய வம்சாவளி முதியவருக்கு 8 மாதம் சிறை தண்டனை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தை சேர்ந்தவர் தேவேந்தர் சிங் (62). இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், கடந்த மார்ச் மாதம் ஹ¨ஸ்டன் நகரில் இருந்து நியூஜெர்சிக்கு விமானத்தில் சென்றார். அப்போது விமானத்தில் இவரது பக்கத்து இருக்கையில் பெண் ஒருவர் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.
விமானப் பயணத்தின் போது தூங்கிக் கொண்டிருந்த தனக்கு தேவேந்தர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பெண் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து தேவேந்தர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நெவர்க் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.
விசாரணை முடிவடைந்த நிலையில், தேவேந்தர் மீதான குற்றம் நிரூபிக்கப் பட்டது. எனவே, அவருக்கு 8 மாத சிறைத்தண்டனை விதித்து நீதிபதி ஸ்டான்லி ஆர்.செல்சர் தீர்ப்பு வழங்கினார்.
மேலும், 2 ஆண்டுகளுக்கு தேவேந்தர் சிங் கண்காணிக்கப்படுவார் என்றும், அவர் பாலியல் குற்றவாளி என அறிவிக்கப்படுவார் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications