அமெரிக்கா: துப்பாக்கியை முனையில் இளம்பெண் பலாத்காரம்
நியூயார்க்: நியூயார்க்கின் பிரான்க்ஸ் நகரில் மருத்துவமனை ஊழியர் போன்று உடை அணிந்த ஒரு நபர் துப்பாக்கி முனையில் பெண்ணை பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று அதிகாலை 5.30 மணியளவில் வெள்ளை உடை அணிந்த அந்த ஆசாமி, செயின்ட் ரேமண்ட் கல்லறைத் தோட்டத்தில் இருந்து வரும் தெருவில் கிழக்கு டிரமான்ட் அவென்யூ அருகில் 24 வயது இளம்பெண்ணை மடக்கிப் பிடித்துள்ளான். பின்னர் வாகன நிறுத்துமிடத்தில் வைத்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அந்த பெண்ணை பலாத்காரம் செய்துவிட்டு சாதாரணமாக நடந்து சென்றுள்ளான்.
இந்த கொடூரமான காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அந்த வீடியோ பதிவை காவல்துறை வெளியிட்டு, குற்றவாளியைப் பற்றி பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடர்பான விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications