ஹிட்லரை ஏமாற்றி தப்பியவர்.. ஆஸி., பயங்கரவாத தாக்குதலில் பலி.. மனைவியை காக்க முயன்று இறந்தார் சோகம்
சிட்னி: ஆஸ்திரேலியாவில் பாண்டி கடற்கரையில் யூதர்களின் ஹனுக்கா திருவிழாவின்போது பாகிஸ்தானை சேர்ந்த தந்தை - மகன் உள்ளே நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 15 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 87 வயது நிரம்பிய அலெக்ஸ் கிளெயிட்மேன் பலியாகி உள்ளனர். இவர் 2ம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் இனப்படுகொலையில் இருந்து தப்பிய நிலையில் பயங்கரவாத தாக்குதலில் மனைவியை காக்க நினைத்து பலியாகி உள்ளார். அவரை பற்றிய கலங்க வைக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் கொடூரமான பயங்கரவாத தாக்குதல நடந்தது. யூத மக்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் ‛ஹனுக்கா' என்ற பெயரில் திருவிழா கொண்டாடப்படும். கிரேக்கர்களின் அடக்குமுறையை வென்றதை குறிக்கும் வகையில் இந்த திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் யூத மக்கள் சார்பில் இந்த திருவிழா கொண்டாடப்பட்டபோது தான் இந்த தாக்குதல் அரங்கேறியது. துப்பாக்கியுடன் நுழைந்த 2 பேர் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 15 பேர் பலியாகினர். 40 பேர் வரை காயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவன் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டான்.
விசாரணையில் பாகிஸ்தானை சேர்ந்த 50 வயதான நவீத் அக்ரம் மற்றும் அவரது 24 வயதான மகன் சஜித் அக்ரம் ஆகியோர் தான் கொடூரமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரியவந்தது. இதில் நவீத் அக்ரம் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டான். சஜித் அக்ரம் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்களுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் ஐஎஸ் பயங்கராத தாக்குதல் என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ‛ஹனுக்கா' கொண்டாட்டத்தில் பங்கேற்கும் யூதர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதும் உறுதியானது.
இதற்கு யூதர்களின் நாடான இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா யூத வெறுப்பை காட்டி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவில்லை என்று இஸ்ரேல் குற்றம்சாட்டி உள்ளது. இந்நிலையில் தான் பாண்டி கடற்கரையில் இறந்தவர்கள் குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் தாக்குதலில் 87 வயது நிரம்பிய அலெக்ஸ் கிளெயிட்மேன் என்பவர் பலியாகி உள்ளார். ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் நடத்திய ஹோலோகோஸ்த் என அழைக்கப்படும் இனப்படுகொலையில் இருந்து தப்பிய அவர் இந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்துள்ள நிலையில் அவரை பற்றிய உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது.
ஹோலோகாஸ்ட் படுகொலை என்பது இரண்டாம் உலகப்போர் சமயத்தில் நடந்தது. 1941ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரை ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் நாசி படைகள் ஐரோப்பியாவில் வாழும் யூதர்களை குறிவைத்து கொன்றது.மொத்தம் 60 லட்சம் பேரை படுகொலை செய்தது. இதனை ஹோலோகாஸ்ட் படுகொலை என அழைக்கின்றனர்.
இந்த படுகொலையில் இருந்து தான் அலெக்ஸ் கிளெயிட்மேன் தப்பினார். சைபீரியாவில் இருந்த அவர் ஹிட்லரின் நாசி படையால் பிரச்சனையை எதிர்கொண்டார். ஹிட்லரிடம் இருந்து தப்பிய யூதர்கள் பல நாடுகளில் தஞ்சமடைந்தனர். அலெக்ஸ் கிளெயிட்மேன் உக்ரைனில் தஞ்சமடைந்தார். உக்ரைனில் இருந்து அவர் தனது மனைவி லாரிசாவுடன் ஆஸ்திரேலியாவில் குடியேறினார். லாரிசாவும் ஹிட்லரின் ஹோலேகால்த் படுகொலையில் இருந்து தப்பியவர் தான்.
இந்நிலையில் தான் சம்பவத்தன்று அலெக்ஸ் தனது மனைவி லாரிசா, பேரக்குழந்தைகள் உள்பட பிற குடும்ப உறுப்பினர்களுடன் பாண்டி கடற்கரைக்கு சென்று ‛ஹனுக்கா'திருவிழாவில் பங்கேற்றார். அப்போது தான் துப்பாக்கிச்சூடு நடந்தது. அதில் அவர் பலியானார். துப்பாக்கிச்சூடு நடந்தபோது அவரது குடும்பத்தினர் அனைவரும் தரையில் படுத்தனர். அலெக்ஸ் கிளெயிட்மேனும் தரையில் படுத்தார். ஆனால் அவரை விட்டு மனைவி லாரிசா சிறிது தூரத்தில் படுத்து கிடந்தார். இதனால் மனைவிக்கு ஏதாவது ஆகிவிடும் என்று அவர் அருகே அலெக்ஸ் கிளெயிட்மேன் சென்றபோது குண்டு பாய்ந்து அவர் பலியானார்.
இதனால் அவரது குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுபற்றி மனைவி லாரிசா கூறுகையில், ‛‛என் கணவர் அலெக்ஸ் கிரெயிட்மேன் என்னை பாதுகாக்க நினைத்தபோது துப்பாபக்கி குண்டு பாய்ந்து இறந்துவிட்டார்'' என அழுதார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications