காஸ்ட்ரோ நல்லாருக்கார், எனக்கு கடிதம் எழுதியுள்ளார்.. மரடோனா தகவல்
ஹவானா: கியூபா தலைவர் பிடல் காஸ்ட்ரோ நலமுடன் இருப்பதாக தனக்கு கடிதம் எழுதி இருப்பதாக அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா தெரிவித்துள்ளார்.
கியூபா அதிபராக இருந்த காஸ்ட்ரோ, கடந்த ஓராண்டு காலமாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை. சமீப காலமாக அவரது கட்டுரைகள் எதுவும் செய்தித்தாள்களில் வெளிவரவில்லை. இதனால், 89 வயதான பிடல் காஸ்ட்ரோ, உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் செய்து பரவியது.

இதனை மறுத்துள்ள கியூபா அரசு, இது போன்ற வதந்திகளை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. முதுமை காரணமாகவே ஃபிடல் காஸ்ட்ரோ கட்டுரைகளை எழுதுவதில்லை என கியூபா விளக்கமளித்தது.
இந்நிலையில், வெனிசுலா தொலைக்காட்சி ஒன்றிற்கு அர்ஜெண்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், ‘பிடல் காஸ்ட்ரோ தனக்கு கடிதம் ஒன்று எழுதியிருப்பதாகவும், அதில் அவர் தான் ஆரோக்கியமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த பேட்டியின் போது காஸ்ட்ரோ எழுதிய கடிதத்தையும் மக்களுக்கு காட்டினார் மரடோனா. அதைக் காட்டி பேசிய மரடோனா, இதோ பாருங்கள் காஸ்ட்ரோ கையெழுத்திட்டுள்ளார் என்றார் மரடோனா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications