ஜப்பானில் விடாமல் கொட்டிய கன மழை...சரசரவென சரிந்த கட்டிடங்கள்...மண்ணில் புதைந்த மக்கள் - வீடியோ
ஜப்பானில் விடாமல் கொட்டிய கன மழை...சரசரவென சரிந்த கட்டிடங்கள்...மண்ணில் புதைந்த மக்கள் - வீடியோ
டோக்கியோ: டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் பல இயற்கை பேரிடர்களை ஜப்பான் சந்தித்து வருகிறது. கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் நூற்றுக்கணக்கானோர் மயாமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ஒருநாள் விடாமல் மழை பெய்தாலே நம்மால் தாங்க முடியாது காணும் இடமெங்கும் வெள்ளக்காடாகி விடும். ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மேற்கு பகுதியில் அட்டாமி நகரில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
கடந்த 3 நாட்களாக விடாமல் கொட்டித்தீர்த்த மழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த பேரிடரில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் 200க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். இதில் பல வீடுகள் மண்ணில் புதைந்து உள்ளன. 100க்கும் அதிகமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலச்சரிவு ஏற்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கொரோனா
கொரோனா நான்காம் அலையின் பரவல் தீவிரமாக இருந்ததன் காரணமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏப்ரல் மாதம் முதல் கட்டுப்பாடுகள் விதிக்கபட்டன. இந்த நிலையில் கொரோனா குறைந்த நிலையில் கட்டுப்பாடுகளை ஜப்பான் அரசு தளர்த்தியது.

ஜப்பானில் மழை
விடாமல் கொட்டிய கனமழை காரணமாக மழை நீருடன் மண்ணும் கலந்து சட சடவென சரிந்ததில், ஏராளமான வீடுகள், கடைகள் உள்ளிட்டவை மண்ணோடு மண்ணாக புதையுண்டன. வீடுகளில் இருந்த பலர் மண்ணோடு புதைந்து போயினர். பலர் அலறியடித்துக்கொண்டு தப்பி ஓடினர்.

மீட்புப்பணிகள்
இந்த பேரிடர் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதுவரை சில உடல்களை கடலோர காவல் படையினர் மீட்டுள்ளனர். இந்த பேரிடரை எதிர்கொள்ள பிரதமர் யோஷிஹிடே சுகா அதிரடி படை ஒன்றை அனுப்பியுள்ளார்.

மண்ணோடு மண்ணாகி போனவர்கள்
காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் மற்றும் ஜப்பானிய ராணுவத்தினரும் மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஜப்பான் நிலச்சரிவு காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ஒலிம்பிக் போட்டி ஜூலை 23ஆம் தேதி ஜப்பானில் தொடங்கவுள்ளது இந்த நிலையில் இயற்கை பேரிடர் ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications