கியூபாவில் கிளர்ச்சி- கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்- அமெரிக்கா சதி என புகார்
ஹவானா: கியூபாவில் விலைவாசி உயர்வு, மருந்து பொருட்கள் பற்றாக்குறை, பொருளாதார தேக்க நிலை ஆகியவற்றால் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஆனால் கியூபா அரசாங்கமோ, இது அமெரிக்காவின் சதி என குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன் கம்யூனிச ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபடுவோருடன் மீது மோதலில் ஈடுபடவும் கியூபா அதிபர் மிகுயேல் டையாஸ் கேனல் உத்தரவிட்டிருக்கிறார்.
மாபெரும் ஆயுத புரட்சியின் மூலம் 1959-ல் கியூபாவில் அமெரிக்கா ஆதரவு சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தவர் பிடல் காஸ்ட்ரோ. 2006-ம் ஆண்டு கியூபாவின் அதிபராக பிடல் காஸ்ட்ரோ பதவி வகித்தார்.

சர்க்கரை உற்பத்தி
அவருக்குப் பின்னர் 2008-ல் அவரது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோ அதிபராக இருந்தார். பிடல் காஸ்ட்ரோ 2016-ல் காலமானார். கடந்த ஆண்டு ராவுல் காஸ்ட்ரோ பதவி விலக, தற்போது கியூபாவின் அதிபராக இருப்பவர் அதிபர் மிகுயேல் டையாஸ். உலகின் சர்க்கரை கிண்ணம் என போற்றப்படும் வகையில் சர்க்கரை உற்பத்தியில் முன்னணி நாடாக கியூபா திகழ்ந்தது. கொரோனா முதல் அலையின் போது மருத்துவ துறையில் உலக நாடுகளை திரும்பிப் பார்க்கும் வகையில் செயல்பட்டது கியூபா.

கியூபா கிளர்ச்சி
தற்போது கியூபா பொருளாதார தேக்க நிலையை எதிர்கொண்டுள்ளது. இதனால் விலைவாசி உயர்ந்துள்ளது- மருந்து பொருட்களும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன. கியூபா முழுவதும் கிளர்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அமெரிக்கா சதி என புகார்
இதனையடுத்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய அதிபர் அதிபர் மிகுயேல் டையாஸ், இது அமெரிக்காவின் சதி; அமெரிக்க ஆதரவாளர்களே அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்துகின்றனர். இந்த போராட்டங்கள் ஒடுக்கப்படும் என்று கூறினார்.

வன்முறைகள் வெடித்தன
அத்துடன் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்கள், போராடும் அமெரிக்க ஆதரவாளர்களுடன் மோதலில் ஈடுபடுங்கள் என பகிரங்கமாக அழைப்பு விடுத்திருக்கிறார். இதனால் போராட்டக்காரர்களுக்கும் கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறைகளும் வெடித்துள்ளன. கியூபாவில் மிக நீண்டகாலத்துக்குப் பின்னர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications