சிட்னி பிணைக்கைதிகள் குறித்த தகவலுக்கு... அவசர உதவி எண்ணை அறிவித்தது இந்திய தூதரகம்
சிட்னி : சிட்னி ஹோட்டல் ஒன்றில் தீவிரவாதிகளால் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளது தொடர்பான தகவல்களைப் பெற இந்தியத் தூதரகம் இலவச தொலைபேசி எண் ஒன்றை அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி மார்ட்டின் பிளேஸ் பகுதியில் உள்ள லின்ட் சாக்கலேட் கேஃப் என்ற ஹோட்டலுக்குள் தீவிரவாதிகள் புகுந்து, அங்கிருந்த பொதுமக்களை சிறைப்பிடித்துள்ளனர். மேலும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடி என சந்தேகிக்கப்படும் கொடியையும் அவர்கள் பறக்க விட்டுள்ளனர்.

தீவிரவாதிகள் பிடியில் இருந்து 5 பேர் இதுவரைத் தப்பி வந்துள்ளனர். ஹோட்டல் வளாகத்தில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆஸ்திரேலியாவில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில், பிணைக்கைதிகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள இந்திய தூதரகம் இலவச தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. அதில், +61481453550 மற்றும் 0061 419687008 என்ற இரண்டு எண்களில் தொடர்பு கொண்டு, தற்போதைய நிலவரம் உள்ளிட்ட தகவல்களை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, பொதுமக்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ள பயங்கரவாதிகள், அவர்களுக்கு எவ்வித தொல்லையையும் கொடுக்கவில்லை என்றும், தாக்கவில்லை என்றும் நியூசவுத்வேல்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பயங்கரவாதிகளில் ஒருவனை போலீசார் தொடர்பு கொண்டுள்ளதாகவும், அவன் மூலம் பேச்சுவார்த்தை நடத்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications