லிபியா படகு விபத்து- மேலும் 200 பேர் இறந்திருக்கலாம் என மீட்புக் குழுவினர் அச்சம்
லிபியா: லிபியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு செல்ல முயன்ற அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 25 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக நீரில் மூழ்கி இறந்த நிலையில் மேலும் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்க வாய்ப்புகள் இருப்பதாக தேடுதல் படையினர் தெரிவித்துள்ளனர்.
கடலில் தத்தளித்து கொண்டிருந்த 400 பேர் உயிருடன் மீட்கபட்டுள்ளனர். நீரில் மூழ்கிய மற்றவர்களை தேடும் பணியில் அந்நாட்டு கடற்படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 600 பேருக்கும் மேற்பட்டவர்களுடன் லிபியாவில் இருந்து மீனவப் படகில் கிளம்பியவர்களின் படகு லிபியா அருகே மத்திய தரைக்கடலில் சென்ற போது இந்த கோர விபத்து நடந்துள்ளது. விபத்திற்கான முழுமையான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த படகு விபத்து அதிகம் பாரம் தாங்காமல் மூழ்கி இருக்கலாம் என சந்தேகப்படுகிறது.
தகவல் அறிந்த வந்த இத்தாலியை சேர்ந்த கப்பல்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. உயிருடன் 400 பேர் மீட்கப்பட்டுள்ளதால், மீதமுள்ளவர்களின் கதி என்ன என்பது குறித்து உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என கருதப்படுகிறது. மூழ்கியவர்களைத் தேடும் பணியில் 3 கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இதே பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 2 படகுகள் விபத்துக்குள்ளானதில், 450 பேர் பலியாகினர். இந்த ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து இதுவரை லிபியா, இத்தாலி இடையிலான கடற்பகுதியில் நிகழ்ந்த படகு விபத்துகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் பலியாகியுள்ளனர்.
ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு ஆசியா நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு போர் மற்றும் வறுமை காரணமாக பலர் பிழைப்பு தேடி ஐரோப்பாவிற்கு ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொள்ளும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications