16 வயதுக்குட்பட்டோரின் பேஸ்புக் - இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கம்.. டிசம்பர் 4ம் தேதிக்கு பின் பயன்படுத்த முடியாது
கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் டிக்டாக், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்டுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை டிசம்பர் 10ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இந்நிலையில் தான் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் உள்ளிட்ட சமூக வலைதள சேவைகளை வழங்கி வரும் மெட்டா நிறுவனம் டிசம்பர் 4ம் தேதிக்குள் 16 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளின் அக்கவுண்ட்டுகளை முடக்குவதாக அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் தற்போது சிறுவர், சிறுமிகள் ஆண்ட்ராய்டு, ஐபோன்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். கொரோனா காலத்தில் பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்தே செல்போன் வழியாக பாடம் படித்த மாணவ-மாணவிகள் தற்போது அதனை தினமும் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

மேலும் பல சிறுவர், சிறுமிகள் சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர் - சிறுமிகள் அதிகளவில் வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்கள் தூக்கமின்மை, கவனச்சிதறல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் ஆஸ்திரேலியா அரசாங்கம் 16 வயதுக்குட்பட்ட சிறுவர் - சிறுமிகளின் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது. இது டிசம்பர் 10ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதனை மீறி சமூக வலைதளங்களில் சிறுவர்- சிறுமிகள் அக்கவுண்ட் வைத்திருந்தால் அதனை நீக்க சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அதிரடியாக உத்தரவிட்டது.
டிக்-டாக், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் உள்பட பல்வேறு சமூக வலைதள நிறுவனங்கள் சிறுவர், சிறுமிகளின் கணக்குகளை நீக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. மேலும் இதனை மீறினால் அந்த சமூக வலைதள நிறுவனங்களுக்கு ரூ.283 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளது.
இதையடுத்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் உள்ளிட்ட சமூகவலைதளங்களை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் 16 வயதுக்கு உட்பட்டவர்களின் கணக்குகளை நீக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது.
டிசம்பர் 4ம் தேதிக்குள் முழுமையாக 16 வயதுக்கு உட்பட்டவர்களின் சமூக வலைதள பக்கங்கள் முடக்கப்படும் என்று மெட்டா தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு அக்கவுண்ட்டும் நீக்கப்படும்போது அதற்கான தகவல் அந்த சிறுவர், சிறுமிகளின் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதனால் அதற்கு முன்பாக சிறுவர், சிறுமிகள் தங்களின் முக்கிய வீடியோ, போட்டோக்கள் சமூக வலைதளங்களில் இருந்தால் அதனை டவுன்லோட் செய்து வைத்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‛‛உங்களுக்கு 16 வயது ஆனவுடன் எங்களின் சேவைகளை எளிதாக பெறலாம். உங்களின் அக்கவுண்ட் தற்போது நீக்கப்பட்டாலும் கூட நீங்கள் மீண்டும் 16 வயதுக்கு பிறகு அதனை அப்படியே பயன்படுத்தலாம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவை எடுத்து கொண்டால் 13 வயது முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்களில் 3.50 லட்சம் பேர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகின்றனர். 1.50 லட்சம் பேர் பேஸ்புக் பயன்படுத்தி வருவதாக அரசு டேட்டாக்கள் சொல்கிறது. இவர்களின் சமூக வலைதளங்கள் தான் டிசம்பர் 4ம் தேதியுடன் முடக்கம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications