''எம்.ஹெச். 17 மலேசிய விமானம் பறக்கும்போதே வெடித்துச் சிதறியுள்ளது''!!
கீவ்: உக்ரைனில் சுட்டுத் தள்ளப்பட்ட மலேசிய விமானம் வெளியே இருந்து சக்திவாய்ந்த பொருட்களால் தாக்கப்பட்டதால் துண்டு துண்டாக வெடித்துச் சிதறியது முதல்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச்.17 கடந்த ஜுலை மாதம் 17ம் தேதி கிழக்கு உக்ரைனில் ரஷ்ய எல்லை அருகே ஏவுகணை வீசித் தாக்கப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 298 பேர் உடல் சிதறி பலியாகினர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் நெதர்லாந்து பாதுகாப்பு ஆணையம் தனது முதல்கட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு
விமானம் தரையில் விழும் வரை அதில் தொழில்நுட்பக் கோளாறோ, அவசர நிலைமையோ ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணை
மலேசிய விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் விமானம் அதிக சக்தி வாய்ந்த பொருட்களால் தாக்கப்பட்டது என்று அறிக்கையில் உள்ளது. பக் ஏவுகணை வீசித் தாக்கினால் அது பல சக்தி வாய்ந்த பொருட்களாக பிரிந்து தான் இலக்கை தாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானம்
விமானம் சக்தி வாய்ந்த பொருட்களால் தாக்கப்பட்டவுடன் பல துண்டுகளாக வெடித்துச் சிதறி தரையில் விழுந்துள்ளது.

ரஷ்யா
உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவுப் படையினர் தான் பக் ஏவுகணை வீசி விமானத்தை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்த பக் ஏவுகணையை ரஷ்யா தான் அவர்களுக்கு கொடுத்தது என்று செய்திகள் வெளியாகின.

சடலங்கள்
தாக்கப்பட்ட மலேசிய விமானத்தில் சென்று பலியான 298 பேரில் இதுவரை 193 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்தவர்களில் 193 பேர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications