பறிபோன இந்திய உயிர்கள்.. ஈரான் தாக்குதலில் கேப்டன் ஆஷிஷ் உட்பட இருவர் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்
தெஹ்ரான்: இஸ்ரேல் ஈரான் போர் தீவிரமடைந்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரான் தாக்கியதில் ஸ்கைலைட் எண்ணெய் கப்பலில் கடும் சேதம் அடைந்திருந்தது. இதற்கிடையே அந்த கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் இருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ஈரான் இடையே கடந்த சனிக்கிழமை ஆரம்பித்த போர் 6வது நாளாக இன்றும் தொடர்கிறது. நாளுக்கு நாள் இந்த போர் தொடர்ந்து விரிவடைந்து வரும் சூழலில், அங்கு ஒரு பிராந்திய போர் உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் மிக மோசமான ஒரு பதற்றம் நிலவி வருகிறது.

போர்
இஸ்ரேல்- அமெரிக்கா தாக்குதலுக்கு ஈரான் முழு வீச்சில் பதிலடி கொடுத்து வருகிறது. ஒரு பக்கம் இஸ்ரேலை நோக்கி ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேபோல மத்திய கிழக்கில் பல்வேறு நாடுகளிலும் அமெரிக்காவுக்குச் சொந்தமான படைகள் உள்ள நிலையில், அந்த படைகள் மீதும் ஈரான் சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தி
மேலும், ஹார்முஸ் ஜலசந்தியையும் மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. அந்த ஜலசந்தி வழியாக எந்தவொரு கப்பல் வந்தாலும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் அறிவித்துள்ளது. அதன்படியே தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. அப்படி தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹார்முஸ் ஜலசந்தியின் அருகே ஓமன் வளைகுடா பகுதியில் முசண்டம் கடற்கரையில் ஈரான் தாக்குதல் நடத்தியது.
இதில் அங்கிருந்த எண்ணெய் கப்பல் தீப்பற்றி எரிந்தது. ஸ்கைலைட் என்ற இந்த எண்ணெய் கப்பலில் மொத்தம் 20 பேர் இருந்துள்ளனர். அதில் 15 பேர் இந்தியர்கள் என்றும் 5 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியானது. முதலில் அவர்கள் நிலை என்னவென்றே தெரியாமல் இருந்தது. பிறகு அவர்கள் மீட்கப்பட்ட நிலையில், அதில் படுகாயமடைந்தோருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஸ்கைலாட் எண்ணெய் கப்பல்
ஸ்கைலாட் என்ற எண்ணெய் டேங்கர் பலாவு நாட்டின் கொடியுடன் இயங்கும் கப்பலாகும். மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள மைக்ரோனேசியா என்ற பகுதியில் உள்ள தீவு நாடான பாலவு நாட்டின் கொடியுடன் இயங்கிய எண்ணெய் டேங்கரை தான் ஈரான் சுட்டு வீழ்த்தி இருக்கிறது.
உயிரிழப்பு
இதற்கிடையே ஸ்கைலைட் எண்ணெய் கப்பலைச் சேர்ந்த காணாமல் போன இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். கேப்டன் ஆஷிஷ் குமார் உட்பட இருவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இது தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வரவில்லை.
-
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications