உத்தரகாண்ட்: உத்தர்காசியில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம்- வல்லுநர்கள் வார்னிங் அப்படியே நடக்குதோ?
உத்தரகாண்ட் மாநிலம் மீண்டும் நிலநடுக்க அதிர்வுகளை எதிர்கொண்டிருக்கிறது.
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் நேற்றும் இன்று அதிகாலையும் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த மிதமான நிலநடுக்க அதிர்வுகளால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்களுக்கு இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை என்கின்றன தகவல்கள்.
துருக்கி, சிரியாவில் பேரழிவை ஏற்படுத்தியது பெரும் நிலநடுக்கம். துருக்கி, சிரியாவை உருக்குலைத்த இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50,000க்கும் அதிகமானோர் மரணம் அடைந்தனர். இரு நாடுகளின் நிலநடுக்கத்தால் பல லட்சக்கணக்கானோர் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். சர்வதேச நாடுகள் இருநாடுகளிலும் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் தொடர்ந்து நில நடுக்கத்தை எதிர்கொண்டு வருகின்றன.

ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை அதிக நிலநடுக்கங்களை எதிர்கொண்டிருக்கின்றன. நமது நாட்டிலும் பல மாநிலங்களில் தொடர்ந்து நில நடுக்க அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக ஆய்வு செய்த தேசிய புவி இயற்பியல் ஆய்வுக் கழகத்தின் தலைமை விஞ்ஞானி என். பூர்ண சந்திர ராவ் எச்சரிக்கை, நிலநடுக்கங்கள் ஏற்படக் காரணமானவை கண்டத் தட்டுகள் நகருதல்தான். இந்திய கண்டத் தட்டு அல்லது டெக்டானிக் பிளேட் என்பது ஆண்டுக்கு 5 செ.மீ. நகர்ந்து கொண்டே இருக்கிறது. இது இந்தியாவில் மிகப் பெரிய நிலநடுக்கத்துக்கான சாத்தியங்களை அதிகப்படுத்தி இருக்கிறது. இமயமலையில் நேபாளத்தின் வடக்கு மற்றும் இந்தியாவின் இமாச்சல பிரதேச மாநிலம் இடையே பெரும் இடைவெளி உருவாகி கொண்டிருக்கிறது. இது உத்தரகாண்ட்டில் மிக மோசமான நிலநடுக்க பாதிப்பை எந்த நேரத்திலும் ஏற்படுத்தும் என கூறியிருந்தார்.
விஞ்ஞானிகள் கூறியபடியே உத்தரகான்ட் மாநிலத்தில் பல பகுதிகளில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. உத்தர்காசி பகுதியில் நேற்றும் இன்றும் 4 முறை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 2.0 அலகுகளாகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. ஆனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்கின்றன தகவல்கள்.
கடந்த வாரம் கூட உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகுகளாக பதிவாகி இருந்தது. உத்தரகாண்ட் நிலநடுக்கத்தால் டெல்லி, ஹரியானா, உ.பி. என வட இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் அதிர்வுகள் உணரப்பட்டன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications