For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜப்பான்: புகுஷிமாவில் இரு முறை நிலநடுக்கம்- சேதம் பற்றிய தகவல் இல்லை

Google Oneindia Tamil News

Moderate quakes hit near Japan's Fukushima
டோக்கியோ: ஜப்பானின் புகுஷிமா பகுதியில் இன்று அதிகாலையில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனால் அணு உலைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜப்பான் நாட்டின் கிழக்குகடற்கரை பகுதியான புகுஷிமாவில் இன்று அதிகாலை இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முதலாவது நிலநடுக்கம் ஹோன்ஷூவில் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானது.அதன் பிறகு இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மற்றொரு முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவானது.இந்நிலையில் சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதே பகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலநடுக்கம்தான் மிகப்பெரிய இயற்கைப் பேரழிவான சுனாமிக்கு வழி வகுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Two moderate earthquakes struck off Japan’s eastern coast near Fukushima early Monday, the US Geological Survey said, but officials said there was no immediate risk to the stricken power plant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X