ஈரான் தாக்குதலில் தப்பிய இஸ்ரேல் பிரதமர்.. நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து பேட்டி!
டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை குறி வைத்து, ஈரான் சராமாரியாக ஏவுகணைகளை வீசியது. இதிலிருந்து, ஈரான் பிரதமர் தப்பியிருக்கிறார். மட்டுமல்லாது ஏவுகணை தாக்கிய இடத்திலிருந்து, செய்தி ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், பஹ்ரைன், சவுதி உள்ளிட்ட நாடுகளுடன் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த நாடுகள் மீதான ஈரானின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

போர் பகுதியில் நெதன்யாகு
இப்படி இருக்கையில், இஸ்ரேலின் பீட் ஷெமேஷ் பகுதியில், ஈரானியத் தாக்குதலில் சேதமடைந்த உள்ள ஒரு யூத ஆலயத்திலிருந்து பேட்டியளித்த நெதன்யாகு, மோடிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். தாக்குதல் நடந்த இடத்தின் இடிபாடுகளுக்கு மத்தியில் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் நெதன்யாகு, இந்த நன்றியைத் தெரிவித்தார்.
மோடிக்கு நன்றி
"என் சிறந்த நண்பரான பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று நீண்ட நேரம் பேசினேன். இஸ்ரேலுக்கு துணையாக நின்றதற்காகவும், உண்மைக்கு ஆதரவாகவும், இந்திய மக்களின் பெரும் நட்புக்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்தேன். இந்தியர்கள் இஸ்ரேலில் மிகவும் மதிக்கப்பட்டு நேசிக்கப்படுகிறார்கள். நான் மோடியிடம் பேசிய உரையாடலின் விவரங்களை வெளியிடப் போவதில்லை. ஆனால், அவரிடமும் பிற பிராந்தியத் தலைவர்களிடமும் பேசினேன்" என்று கூறியிருக்கிறார்.
இந்தியா-இஸ்ரேல் உறவு
இரு தலைவர்களுக்கும் இடையே தனிப்பட்ட வகையில் நல்லுறவு இருந்து வருகிறது. வர்த்தகம், பாதுகாப்பு, மக்கள் தொடர்புகள் எனப் பல துறைகளிலும் இந்தியா-இஸ்ரேல் இடையே ஆழமான உறவுகள் உள்ளன.
ஈரானில் ஆட்சி மாற்றம்
ஈரானிய மக்கள், தங்கள் ஆட்சியாளர்களை நீக்குவதற்கான சூழலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று கூறிய நெதன்யாகு, "அந்த நாள் வெகு விரைவில் வரும். இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானிய மக்களுடன் இருக்கும். ஈரானிய மக்கள் எங்களுடன் இருப்பது மிகவும் முக்கியம். ஆட்சி மாற்றம் அவர்களைப் பொறுத்தது; நாங்கள் உறுதுணையாக இருப்போம்" என கூறியுள்ளார்.
தாக்குதல்கள் ஆரம்பித்ததிலிருந்து, ஈரானிய மக்கள் கொடுங்கோன்மையின் பிடியில் இருந்து விடுபடுமாறு நெதன்யாகு வலியுறுத்தி வருகிறார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உங்கள் நாட்டை மீட்டெடுங்கள் என்று வலியுறத்தியுள்ளார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications