யு.எஸ்.-ல் ஒபாமா உட்பட 12 நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார்
நியூயார்க்: ஐ.நா. சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் ஒபாமா உட்பட 12 நாட்டு தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார்.
பிரதமர் மோடி அயர்லாந்து பயணத்தை நிறைவு செய்துவிட்டு இன்று நியூயார்க் சென்றடைந்தார். அங்கு அவருக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

பிரதமர் மோடியின் அமெரிக்கா பயணம் மற்றும் உலக நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு இந்தியாவுக்கான அமெரிக்கா தூதர் அருண் கே சிங் கூறுகையில், அமெரிக்கா அதிபர் ஒபாமாவை பிரதமர் மோடி வரும் 28-ந் தேதி சந்தித்து பேசுகிறார். இருநாட்டு தலைவர்களிடையே நிகழும் 3வது சந்திப்பு இது.
இச்சந்திப்பில் சர்வதேச அரசியல் நிலவரங்கள், இருதரப்பு வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்பட உள்ளன என்றார். இருப்பினும் பிரதமர் மோடி- ஒபாமா சந்திப்பு எங்கே நடைபெறும் என தெரிவிக்கப்படவில்லை.
இதேபோல் பிரான்ஸ், ஜோர்டான், பூடான், மெக்சிகோ, ஸ்வீடன், கத்தார், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். ஜி 4 நாடுகள் உச்சி மாநாட்டின் போது ஜப்பான் பிரதமர் மற்றும் ஜெர்மன் அதிபர் மற்றும் பிரேசில் அதிபர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
அதே நேரத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை பிரதமர் மோடி சந்தித்து பேசமாட்டார் எனவும் கூறப்படுகிறது.
மேலும் சிலிக்கான்வேலியில் செப்டம்பர் 27-ந் தேதியன்று அமெரிக்கா வாழ் இந்தியர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அத்துடன் ஃபேஸ்புக் தலைமையகம் செல்கிறார். மேலும் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார்.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications