உலக சிந்தனையாளர்கள் பட்டியல்: நம்பர் 1 இடத்தில் பிரதமர் மோடி
வாஷிங்டன்: உலக சிந்தனையாளர்கள் பட்டியலில் உலகளவில் 100 பேரில் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தை பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல், பா.ஜ.கவின் தேசியத்தலைவர் அமித் ஷா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
சர்வதேச அளவில் பொதுவாழ்வில் ஈடுபட்டு வரும் மிகச்சிறந்த பிரமுகர்கள், வல்லுனர்கள், தலைவர்கள் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க இதழான ‘பாரின் பாலிசி' வெளியிட்டு வருகிறது. இந்தாண்டுக்கான பட்டியலை தன் வாசகர்களிடம் ஆன்லைன் ஓட்டுப்பதிவு மூலம் இந்த இதழ் தேர்ந்தெடுத்துள்ளது.
அமெரிக்காவின் பாரின் பாலிசி, பிரிட்டனின் ப்ராஸ்பெக்ட் இதழ்கள் சேர்ந்து தான் முதன் முதலில் 2005 ஆம் ஆண்டில் உலக சிந்தனையாளர் பட்டியலை வெளியிட்டது. பின், ஒவ்வொரு ஆண்டும் ‘பாரின் பாலிசி' இதழ் வெளியிட்டது.
இந்த இதழ் தன் வாசகர்களிடம் ஆன்லைனில் சர்வே நடத்தி இந்த பட்டியலை தொகுத்துள்ளது. பெரும்பாலும், அமெரிக்க, ஐரோப்பிய வாசகர்கள் தான் ஓட்டளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வசீகரமான தலைவர் மோடி
இந்த பட்டியலில் 64 வயதான மோடி, வசீகரிக்கும் மற்றும் வர்த்தகத்திற்கு சாதகமாக செயல்படும் தலைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலின் போது கவர்ச்சிகரமான பிரசாரத்தை மோடி வெளிப்படுத்தினார்.

அமித்ஷா
உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக கட்சி ஆணித்தரமாக காலூன்ற காரணமான 50 வயதான அமித் ஷா, பிரச்சார இயந்திரமாக செயல்பட்டார். இதனால் அவரது பெயரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

அருந்ததி பட்டாச்சார்யா
பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சாரியாவின் பெயரும் இப்பட்டியலில் உள்ளது. இந்தியாவின் கடன் தொடர்பான கடுமையான உண்மைகளை தெரிவித்ததற்காக அவரது பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பிரபல இந்தியர்கள்
மேலும், இதில் இந்திய தேசிய போலியோபிளஸ் குழு சேர்மன் தீபக் கபூர் கேம்பிரிட்ஜ் மருத்துவர் சங்கீதா பாடியா, சுற்றுச்சூழல் விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதன், பொருளாதார நிபுணர் பார்த்தா தாஸ்குப்தா ஆகிய இந்தியர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications