தவறான இடத்தில் தேடினால் மலேசிய விமானம் எப்படி கிடைக்கும்?: நிபுணர்கள்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: மாயமான மலேசிய விமானம் விழுந்த இடத்தில் அதை யாரும் தேடவில்லை என்று இங்கிலாந்தைச் சேர்ந்த இன்மார்சாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது.

இதையடுத்து விமானத்திற்கு என்ன ஆனது என்று தெரியாமல் மலேசியா குழம்பியது.

இன்மார்சாட்

இன்மார்சாட்

இங்கிலாந்தைச் சேர்ந்த இன்மார்சாட் என்னும் சாட்டிலைட் நிறுவனம் தான் மாயமான மலேசிய விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்ததாக மலேசிய அரசிடம் தெரிவித்தது. இதையடுத்து தான் விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கியதாக மலேசியா அறிவித்தது.

கடலில்

கடலில்

கடலில் விமானம் எந்த இடத்தில் விழுந்திருக்கக்கூடும் என்பதையும் இன்மார்சாட் நிறுவன விஞ்ஞானிகள் கணக்கிட்டு தெரிவித்தனர்.

தேடல்

தேடல்

தேடலில் ஈடுபட்டுள்ள ஓஷன் ஷீல்ட் என்ற ஆஸ்திரேலிய கப்பலோ போயிங் விமானத்தில் இருந்து வந்ததாக கருதப்படும் சிக்னல் கிடைத்த இடத்தில் விமானத்தை தேடுகிறது. இது விஞ்ஞானிகள் கணக்கிட்ட இடம் இல்லை.

ஒரு பாகம் கூட

ஒரு பாகம் கூட

மாயமான விமானத்தை 26 நாடுகள் சேர்ந்து தேடி வரும் நிலையிலும் இதுவரை ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. விமானம் மாயமாகி 100 நாட்களை தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு இடம்

வேறு இடம்

தேடல் பணியில் ஈடுபட்டுள்ளோர் விமானம் விழுந்த இடத்தை இதுவரை நெருங்கக்கூட இல்லை என்று இன்மார்சாட் நிறுவன நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தேடல் குழு விமானத்தை தவறான இடத்தில் தேடுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+