ஏம்ப்பா, தக்காளி சாஸுக்குள் மூளையப் போட்டது யாருப்பா...!
லண்டன்: இங்கிலாந்தின் வொர்சஸ்டர் நகரில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தக்காளி சாஸ் வாங்கிய பெண், அந்த சாஸுக்குள் ஒரு 'மூளை' இருந்ததைப் பார்த்து பீதியடைந்தார்.
இதுகுறித்து அந்த தக்காளி சாஸ் தயாரிப்பு நிறுவனத்தின் நுகர்வோர் பிரிவு அதிகாரிக்குப் போன் செய்து புகார் கூறியபோது அந்த அதிகாரி என்னங்க மேடம் காமெடி கீமெடி பண்றீங்களா என்று கேட்டுச் சிரித்தாராம்.
ஆனால் தனது தக்காளி சீஸுக்குள் கிடந்தது மூளைதான் என்று அந்தப் பெண் அடித்துக் கூறுகிறார்.

லிடில் பாஸ்தா சாஸ்
அந்தப் பெண்ணின் பெயர் ஜூலின் மார்ட்டர். 47 வயதான இவர் 3 குழந்தைகளுக்குத் தாயாவார். இவர் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பிரபலமான லிடில் பாஸ்தா சாஸ் எனப்படும் தக்காளி சாஸை வாங்கினார்.

பாக்கெட்டைத் திறந்தால் மூளை...
பாக்கெட்டைத் திறந்து சாஸை வெளியில் கொட்டியபோது அதில் ஏதோ மிதப்பதைப் பார்த்தார். என்னவென்று வெளியில் எடுத்துப் பார்த்தபோது அச்சு அசல் மனித மூளை போல ஒன்று இருந்ததாம்.

10 செமீ விட்டம்
அந்த 'மூளை'யானது 10 செமீ விட்டத்தைக் கொண்டதாக இருந்ததாக கூறுகிறார் மார்ட்டர்.

ஹலோ கஸ்டமர் கேர்...
இதைப் பார்த்துப் பீதியடைந்த அந்தப் பெண் உடனே கஸ்டமர் கேருக்குப் போனைப் போட்டார். தக்காளி சாஸில் 'மூளை' மிதப்பதாக கூறியுள்ளார்.

அட ஏங்க மேடம் நீங்க வேற...!
ஆனால் கஸ்டமர் கேர் அதிகாரியோ, காமெடி பண்ணாதீங்க மேடம் என்று கூறிச் சிரித்தாராம். மேலும் அது மூளையாக இருக்காது, தக்காளியாக வேண்டுமானால் இருக்கலாம் என்றும் கூறினாராம்.

தக்காளி இல்லையேப்பா...
ஆனால் மறுபடியும் அந்தப் பொருளை சோதனையிட்ட மார்ட்டர், அது தக்காளி இல்லை, நிச்சயம் மூளைதான். நல்லா ஸ்பாஞ்சு போல இருந்தது என்றார்.

போட்டோ எடுத்து அனுப்புங்க
இதையடுத்து கஸ்டமர் கேர் அதிகாரி, அந்த மூளையை புகைப்படம் எடுத்து இமெயிலில் அனுப்பி வைக்குமாறு கூறினாராம். அதன்படி மார்ட்டரும் அனுப்பினாராம். அதன் பிறகு அவர்களிடமிருந்து எந்தத் தாக்கலும் இல்லையாம்.
அட விடுங்க மார்ட்டர்.. இங்கெல்லாம் பல்லி, கரப்பான் பூச்சி, தவளை என பல 'பார்ட்டி'களை எடுத்துப் போட்டு சாப்ட்டிட்டிருக்கோம்.. இதுக்குப் போயி அலட்டிக்கலாமா...!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications