Bangladesh: வங்கதேசம் இனி எழுவது கஷ்டம்.. ஒன்றரை வருடத்தில் புதைக்குழியில் தள்ளிய முகமது யூனுஸ்! ஷாக் டேட்டா
டாக்கா: வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக இருந்து முகமது யூனுஸ் கடந்த ஒன்றரை ஆண்டுகள் செயல்பட்டார். இந்த காலக்கட்டத்தில் வங்கதேசத்தின் மொத்த கடன் என்பது கூடுதலாக 23 லட்சம் கோடி வரை அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி 30 லட்சம் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே சென்றுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

வங்கதேசத்தின் புதிய பிரதமராக பிஎன்பி கட்சியின் தாரிக் ரஹ்மான் பதவியேற்றுள்ளார். முன்னதாக பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா மாணவர்கள் போராட்டத்தால் கடந்த 2024 ஆகஸ்ட் 5ம் தேதி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்தார்.
இதையடுத்து 2024 ஆகஸ்ட் 8 ம் தேதி முதல் ஒன்றரை ஆண்டு காலமாக வங்கதேசத்தில் இடைக்கால அரசின் ஆட்சி நடந்தது. இந்த அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் செயல்பட்டு வருகிறார். தற்போது புதிய பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்றுள்ள நிலையில் முகமது யூனுஸ் பதவி விலகி உள்ளார்.
பார்டர் ஏரியாவில் 40 கி.மீ ரயில் சுரங்கப்பாதை.. மிரண்டு போன சீனா - வங்கதேசம்
இந்தியாவுடன் சீண்டல்
இந்த முகமது யூனும் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நம் நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வந்தார். மேலும் இவரது தலைமையில் வங்கதேசம் கொந்தளிப்பான மனநிலையில் இருந்தது. தொடர்ந்து வன்முறைகள் வெடித்தது.
சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். மேலும் முகமது யூனுஸ் நம் நாட்டை தொடர்ந்து சீண்டி வந்தார். வடகிழக்கு மாநிலத்துக்கு உரிமை கொண்டாடும் வகையில் செயல்பட்டு வந்தார்.
வறுமையில் 30 லட்சம் மக்கள்
இந்நிலையில் தான் முகமது யூனுஸ் ஆட்சியில் வங்கதேசம் பின்நோக்கி சென்றுள்ளதாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வங்கதேசத்தில் அதிகமான மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் சென்றுள்ளனர். அவரது தவறான நிர்வாகத்தால் 30 லட்சம் மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் தள்ளி உள்ளார் என்று உலக வங்கி நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழுத்தங்களுக்கு அடிபணிந்து...
இதுபற்றி வங்கதேசத்தின் ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழக துணைவேந்தரும், பொருளாதார நிபுணருமான அப்துல் பேஸ் கூறுகையல், ‛‛முகமது யூனுஸ் பொருளாதார நிபுணர் ஆவார். ஆனால் அவர் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கிடைத்த வாய்ப்பை வீண்டித்துள்ளார். ஜமாத் உள்பட பிற அடிப்படைவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து நாட்டை படுகுழிக்குள் தள்ளிவிட்டார்.
கடன் அதிகரிப்பு
வங்கதேசம் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. இப்படியான சூழலில் முகமது யூனுஸின் தவறான பொருளாதார நிர்வாகத்தால் வங்கதேசத்தின் சர்வதேச கடன் கூடுதலாக 23 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்த கடனை திரும்ப செலுத்துவது புதிய அரசுக்கும், மக்களுக்கு பெரிய அளவில் சுமையாக இருக்கும்.
அதேபோல் இந்த ஒன்றரை ஆண்டுகளில் வங்கிகளின் வாராக் கடன்கள் கிடுகிடுவென உயர்ந்தன.2025 செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி பார்த்தால் வங்கிகளின் செலுத்தப்படாத கடன்கள் 6.44 லட்சம் கோடி வங்கதேச டாக்காவா உள்ளது. இது மொத்த கடன் விநியோகத்தில் 35.73% ஆகும். மேலும் அதிக வட்டியுடன் பெறப்பட்ட வெளிநாட்டு கடன்கள் தற்போது வங்கதேசத்துக்கு இன்னும் கஷ்டத்தை கொடுக்கும்.
வெள்ளை அறிக்கை
இதனால் வரும் காலத்தில் வங்கதேசம் பெரிய அளவிலான பொருளாதார நெருக்கடியில் சிக்கும். எனவே புதிய அரசு சுதாகரித்து பொருளாதார சீரமைப்பை மேற்கொள்ள வேண்டும். முதற்கட்டமாக பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட்டு அதனை சரிசெய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்'' எனறு கூறியுள்ளார்.
-
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு












Click it and Unblock the Notifications