Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

7 சிஸ்டரும் உங்களுக்குத்தான்? வடகிழக்கு மாநிலத்தை இழுத்து சீனாவை தூண்டிய முகமது யூனுஸ்.. சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் 4 நாள் பயணமாக சீனா சென்றார். அங்கு நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை இழுத்து பேசி முதலீடு ஈர்க்க முயன்றது சர்ச்சையாகி உள்ளது. இதற்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் இந்தியா உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. அப்படி முகமது யூனுஸ் என்ன பேசினார்? என்பது பற்றிய விபரம் வருமாறு:

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த மாணவர்களின் போராட்டம் வன்முறையானது. இதையடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நம் நாட்டில் தஞ்சமடைந்தார். அதன்பிறகு அங்கு இடைக்கால அரசு அமைந்தது.

muhammad-yunus-referred-to-the-7-states-in-northeast-india-for-seeking-to-attract-chinese-investment

இந்த இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் உள்ளார். இவர் பொறுப்பேற்றது முதல் நம் நாட்டுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். பாகிஸ்தான், சீனாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.

அதோடு நம் நாட்டை தொடர்ந்து சீண்டி வருகிறார். இப்படியான சூழலில் தான் 4 நாள் பயணமாக முகமது யூனுஸ் சீனாவுக்கு சென்றார். வங்கதேசம் - சீனா இடையேயான தூதரக உறவின் 50 வது ஆண்டையொட்டி அவர் இந்த பயணத்தை மேற்கொண்டார். கடந்த மாதம் மார்ச் 26ம் தேதி வங்கதேசத்தின் சுதந்திர தினத்தில் அவர் சீனா புறப்பட்டு சென்றார். அதன்பிறகு அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அப்போது இருநாடுகள் இடையே சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

சீனாவை பொறுத்தவரை வங்கதேசத்தின் துறைமுகங்களுக்கு அதிக உதவிகளை செய்து வருகிறது. அதன்படி மோங்க்லா துறைமுகத்துக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர், சிஇஐஇசட் திட்டத்துக்கு 350 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் தொழில்நுட்பம் ரீதியாக 150 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வழங்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக இருநாடுகள் இடையே சில முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. மேலும் இந்த பயணத்தின்போது முகமது யூனுஸ், சீனாவின் தொழிலதிபர்களை சந்தித்து பேசினார். முதலீட்டை ஈர்ப்பதற்காக சீன தொழில் அதிபர்கள் முன் உரையாற்றினார்.

அப்போது முகமது யூனுஸ் பேசியது தான் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக முகமது யூனுஸ் பேசியதாவது: வங்கதேசம் என்பது முதலீட்டுக்கு சிறந்த நாடாக உள்ளது. கடல்வழி போக்குவரத்து வங்கதேசத்தில் உள்ளது. இந்தியாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஏழு மாநிலங்கள், ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த மாநிலங்கள் அமைந்திருக்கும் பகுதி முழுக்க, முழுக்க நிலத்தால் சூழப்பட்ட பகுதி.
இங்கிருந்து கடலை அடைய முடியாது. இதனால் இந்த பகுதிகளில் நாங்கள் தான் கடல் பாதுகாவலர்களாக இருக்கிறோம். இந்த நில அமைப்பு என்பது நல்ல வாய்ப்பை தரும். சீனா தனது பொருளாதாரத்தை பெருக்க இதை பயன்படுத்திக்கொள்ளலாம். இங்கு பொருட்களை உற்பத்தி செய்யலாம். சந்தைப்படுத்தலாம். உலகின் பிற பகுதிக்கும் எடுத்து செல்லலாம்'' என்று கூறினார்.

பொதுவாக ஒருநாட்டின் தலைவர் வெளிநாடுகளுக்கு சென்று தொழில் முதலீடுகளை ஈர்க்கும்போது தங்கள் நாட்டில் உள்ள வசதிகள், தங்கள் நாட்டுக்கு தொழில் தொடங்க வந்தால் வழங்கப்படும் சலுகைகள், வசதிகள் பற்றி எடுத்து கூறுவார்கள். ஆனால் இந்த முகமது யூனுஸ் வங்கதேசத்தின் பெருமையை கூறுவதற்கு பதில் வங்கதேசம் - இந்தியா எல்லையில் உள்ள நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இவரது இந்த பேச்சின் பின்னணியில் இன்னொரு முக்கிய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது வடகிழக்கு மாநிலங்கள் மேற்கு வங்க மாநிலத்தின் கோழிக்கழுத்து பகுதியின் வழியாக சிலிகுரி காரிடார் மூலம் நம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைகிறது. இந்த கோழிக்கழுத்து பகுதி இல்லாவிட்டால் 7 வடகிழக்கு மாநிலங்களுக்கும், இந்தியாவுக்கும் தொடர்பு என்பது இல்லாத நிலை இருக்கும். இந்த கோழிக்கழுத்து பகுதி என்பது இந்தியா- வங்கதேசம் எல்லையாக வருகிறது. இதனை மையப்படுத்தி தான் முகமது யூனுஸ் பேசி உள்ளதாக சொல்லப்படுகிறது.

அதாவது வங்கதேசத்தில் சீனா முதலீடு செய்யும்பட்சத்தில் வங்கதேசம் மட்டும் இன்றி வங்கதேசம் வழியாக இந்த 7 மாநிலங்களையும் வணிக ரீதியாக தங்கள் கட்டுப்பாட்டில் சீனா கொண்டு வரலாம் என்பதை மறைமுகமாக முகமது யூனுஸ் எடுத்து கூறி உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே நம் நாட்டுக்கு சொந்தமான சில இடங்களுக்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அதில் லடாக் மட்டுமின்றி அருணாச்சல பிரதேசமும் ஒன்றாகும். இந்த அருணாச்சல பிரதேசம் என்பது வடகிழக்கு மாநிலமாக உள்ளது. இதனால் தான் அருணாச்சல பிரேதசம் மட்டுமின்றி பிற 6 வடகிழக்கு மாநிலங்களிலும் ஆதிக்கம் செலுத்த சீனா வங்கதேசத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்து முகமது யூனுஸ் பேசி உள்ளதாக பலரும் நம்புகின்றனர்.

இதன்மூலம் நம் நாட்டுக்கு எதிராக சீனாவுக்கு ஆசைக்காட்டி தொழில் முதலீடுகளை ஈர்க்க வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் முயன்றுள்ளார். இதற்கு தற்போது கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனை குழுவில் இருக்கும் நிபுணர் சஞ்சீவ் சன்யா, ‛‛வங்கதேசத்தில் சீனா முதலீடு செய்வதை வரவேற்கின்றனர். ஆனால் வங்கதேச தொழில் முதலீடுக்கு 7 இந்திய மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டு இருப்பது எந்த வகையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது?'' என்று கேள்வி எழுப்பி உள்ளார். இதுபற்றி அரசியல் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளரான கிறிஸ் பிளாக்பர்ன், ‛‛இது மிகவும் கவலையளிக்க கூடிய விஷயம். இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். முகமது யூனுசின் பேச்சு தேவையற்ற பிரச்னையை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவின் 7 மாநிலங்களிலும் சீனா வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று அவர் பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறாரா? இதை முகமது யூனுஸ் தெளிவுப்படுத்த வேண்டும்' என்று கிறிஸ் கூறி உள்ளார்.

அதேபோல் இந்தியர்கள் பலரும் முகமது யூனுஸின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு வங்கதேசத்துக்கு இந்தியா உரிய முறையில் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஏனென்றால் வடகிழக்கு மாநிலங்களை மையப்படுத்தி வங்கதேச இடைக்கால அரசை சேர்ந்தவர்கள் இப்படி பேசுவது இது முதல் முறையல்ல. சில மாதங்களுக்கு முன்பு வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசத்துடன் இணைத்து அந்த நாட்டை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது முகமது யூனுஸ் நம் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி தேவையின்றி சீனாவிடம் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். இதனால் வங்கதேசத்தின் ஆட்டத்தை காலி செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் நெட்டிசன்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+