புலிகள் தளபதி திலீபனுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அஞ்சலி- அக். 21-ல் யாழில் இசை நிகழ்ச்சி!
யாழ்ப்பாணம்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரும் இந்தியாவிடம் கோரிக்கை வைத்து சொட்டு நீரும் அருந்தாமல் உயிர் நீத்தவருமான திலீபனின் நினைவிடத்தில் தமிழ்நாட்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நேற்று அஞ்சலி செலுத்தினார்.
தமிழ்நாட்டின் தற்போதைய டிரெண்டிங் இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். கர்ணன் திரைப்படத்துக்கு இசையமைத்தவர் சந்தோஷ் நாராயணன். அதில் இடம் பெற்ற கண்டா வரச்சொல்லுங்க பாடலை இலங்கை தமிழர்கள், தங்களது தலைவர் பிரபாகரனை கண்டா வரச் சொல்லுங்க என பாடி சமூக வலைதளங்களில் தீ பரவச் செய்திருந்தனர்.

சந்தோஷ் நாராயணனின் மனைவி மீனாட்சி ஈழத் தமிழர். இலங்கையின் யாழ்ப்பாணம் கோண்டாவில் என்ற இடத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் மீனாட்சி.
இலங்கை யாழ்ப்பாணத்தில் செப்டம்பர் 30-ந் தேதி பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை சந்தோஷ் நாராயணன் நடத்த திட்டமிட்டிருந்தார். இந்த இசை நிகழ்ச்சி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் அக்டோபர் 21-ந் தேதி மாலை 4 மணிக்கு சந்தோஷ் நாராயணனின் "யாழ் கானம்" இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மனைவி மீனாட்சியுடன் யாழ்ப்பாணத்துக்கு ஞாயிற்றுக்கிழமையன்று சந்தோஷ் நாராயணன் வருகை தந்தார். யாழ்ப்பாணம் உட்பட தமிழர் தாயகப் பகுதிகளில் திலீபன் நினைவு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்திய அமைதிப்படை 1987-ல் இலங்கையில் தலையிட்ட போது இந்தியாவிடம் கோரிக்கைகளை வைத்து சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர் திலீபன். இந்த தியாகத்தைப் போற்றும் வகையில் செப்டம்பர் மாதத்தில் திலீபன் நினைவு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

தற்போது யாழ்ப்பாணம் சென்ற சந்தோஷ் நாராயணன், மனைவியுடன் நல்லூர் சென்றார். நல்லூரில் திலீபன் நினைவிடத்துக்கு மனைவியுடன் சென்று சந்தோஷ் நாராயணன் நினைவஞ்சலி செலுத்தினார்.
South Indian music composer Santhosh Narayanan paid tribute to Thilipan@Music_Santhosh pic.twitter.com/QTPa6DY80D
— Vinojana (@Vinojana9) September 24, 2023
இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் விடுதி ஒன்றில் உள்ளூர் இசைக் கலைஞர்களுடன் "யாழ் கானம்" இசை நிகழ்ச்சி தொடர்பாகவும் சந்தோஷ் நாராயணன் ஆலோசனை நடத்தினார். இந்த இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இலங்கையில் தமிழர் பகுதியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாட்டு இசையமைப்பாளர் ஒருவர் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
சீனாவில் தமிழருக்கு கிடைத்த மிக முக்கிய உயர் பொறுப்பு.. யார் இந்த விக்ரம் துரைசாமி! -
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து












Click it and Unblock the Notifications