தாய்லாந்து பூகம்பம்.. பாங்காக்கில் சரிந்த ஒரே கட்டிடம் சீன நிறுவனம் கட்டியதாம்! வெளியான ஷாக் தகவல்
பாங்காக்: மியான்மரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரலாறு காணாத அளவுக்கு மிக மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு தாய்லாந்து வரை உணரப்பட்ட நிலையில், அங்கு பாங்காக்கில் கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதற்கிடையே இடிந்து விழுந்த இந்த கட்டிடத்தால் சீன நிறுவனம் ஒன்று வம்பில் சிக்கியுள்ளது.
மியான்மரை தாக்கிய இந்த நிலநடுக்கம் தாய்லாந்திலும் பரவலாக உணரப்பட்டது. குறிப்பாகத் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் இந்த பூகம்பம் உணரப்பட்டது. அங்கு பாங்காக்கில் 33 மாடி உயரமான கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்த நிலையில், அந்த கட்டிடம் ஒரே நொடியில் இடிந்து விழுந்தது. கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த பல தொழிலாளர்கள் உள்ளே சிக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நொடியில் சரிந்த கட்டிடம்
அவர்களை மீட்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. அந்த இடத்தில் இருந்து இதுவரை 17 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 32 பேர் காயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 83 பேர் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
அங்கு யாராவது உயிருடன் இருக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். வெப்ப இமேஜிங் ட்ரோன்களுடன் மீட்புப் பணிகள் நடந்து வருகிறது. அதில் குறைந்தது 15 பேர் உயிருடன் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடிந்த ஒரே கட்டிடம்
பாங்காக் என்பது வானுயர்ந்த கட்டிடங்கள் நிறைந்த ஒரு நகரமாகும். அங்கு வேறு எந்த கட்டிடமும் அழிவை சந்திக்காத நிலையில், இந்த ஒரு கட்டிடம் மட்டும் அழிந்துள்ளது. 45 மில்லியன் பவுண்டுகள் செலவில் கடந்த 3 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த இந்தக் கட்டிடம் ஒரே நொடியில் இடிந்து விழுந்தது பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக இருக்கிறது.. குறிப்பாகக் கட்டிடத்தின் உறுதித்தன்மை குறித்து பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
பலரும் இது குறித்து கேள்வி எழுப்பி வரும் நிலையில், இது குறித்து விசாரணை நடத்தி ஏழு நாட்களில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யத் தாய்லாந்தின் துணைப் பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் உத்தரவிட்டுள்ளார்.
வம்பில் சிக்கிய சீன நிறுவனம்
தாய்லாந்து அரசின் தணிக்கை துறைக்காகக் கட்டப்பட்டு வந்த இந்தக் கட்டிடத்தை இத்தாலிய-தாய்லாந்து மேம்பாட்டு பிஎல்சி மற்றும் சீனா ரயில்வே நம்பர் 10 என்ற இரு நிறுவனங்கள் இணைந்தே கட்டி வந்தன. இதில் சீனா ரயில்வே நம்பர் 10 என்பது சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். அதில் சீனா நிறுவனத்திற்கு 49 சதவீத பங்குகள் இருக்கிறது.
கடந்த 2018ம் ஆண்டில் சீனா ரயில்வே எண் 10 தாய்லாந்து என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போது முதல் தாய்லாந்தில் மேற்கொள்ளப்படும் அலுவலக கட்டிடங்கள், ரயில்வே மற்றும் சாலைகள் உள்ளிட்ட பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களை கண்டிராக்ட் எடுத்து இந்த நிறுவனம் கட்டி வருகிறது. இந்த நிறுவனத்தில் சோஃபோன் மீச்சாய், பிரச்சுவாப் சிரிகேத் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளனர்.
விசாரணை
நிலநடுக்கத்தில் இந்த ஒரு கட்டிடம் மட்டும் இடிந்து விழுந்துள்ள நிலையில், இதன் உறுதித்தன்மை சர்ச்சையாகியுள்ளது. இதையடுத்து இது தொடர்பான விசாரணையில் தாய்லாந்து அரசு இறங்கியுள்ளது. இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications