மே மாதம் ஏலத்திற்கு வரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாணச் சிலை!
டிரம்பின் நிர்வாணச் சிலை ஏலத்தில் விடப்பட இருக்கிறது.
Recommended Video

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாணச் சிலை வரும் மே மாதம் ஏலத்தில் விடப்படுகிறது.
கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்த சமயத்தில் தனது பிரச்சாரக்கூட்டப் பேச்சுகளால் பெரும் சர்ச்சைகளில் சிக்கினார் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப்.

அப்போது டிரம்ப் அதிபராவதை கடுமையாக எதிர்த்த இண்டிகிளின் என்ற குழுவை சேர்ந்தவர்கள், அவரது நிர்வாணச் சிலையை சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ், கிளீவ்லான்ட், சியாட்டில், மற்றும் நியூயார்க் நகரங்களில் உள்ள முக்கிய இடங்களில் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
10 அடி உயரத்தில் கடுமையான முகத் தோற்றம், பெரிய தொப்பை, சிறிய விரல்கள் கொண்ட கைகள் தொப்பையைக் கட்டியவாறு அந்த ஐந்து சிலைகளும் உருவாக்கப்பட்டிருந்தன. வெண்ட் கோஸ்ட் பகுதியை சேர்ந்த சிற்பி ஒருவரால் உருவாக்கப்பட்டவை அந்தச் சிலைகள்.
இதுபற்றிய தகவல் பரவியதும் சிறிது நேரத்தில் அந்தச் சிலைகள் அங்கிருந்து அகற்றப்பட்டன. அவைகளில் ஒன்றைத் தவிர மற்றவை அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன. அதற்குள் சிலர் அந்தச் சிலைகளுடன் நின்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிந்தனர். அந்தப் படங்கள் வைரலாகின.
இந்நிலையில், தற்போது டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவி வகித்து வரும் நிலையில், மீதமுள்ள அந்த ஒரு நிர்வாணச் சிலையை ஏலத்தில்விட ஜூலியன் ஏல நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வருகிற மே மாதம் 2-ந்தேதி நியூஜெர்சியில் உள்ள ஜெர்சி நகரில் இந்த ஏலம் நடைபெற இருக்கிறது.அதில், இந்தச் சிலை ரூ.13 லட்சம் முதல் ரூ.22 லட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications