1.6 கோடி கிமீ தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்! மனித குலத்துக்கு விடிவுகாலம் வந்துடுச்சு!
வாஷிங்டன்: விண்வெளியில் தகவல் பரிமாற்றத்திற்கு லேசர் டெக்னாலஜியை பயன்படுத்த முடியும் என்பதை நாசா சோதனை மூலம் நிரூபித்திருக்கிறது. சமீபத்தில் நாசா நடத்திய சோதனையில் சுமார் 1.6 கோடி கி.மீ தூரத்திலிருந்து லேசர் சிக்னல் மூலம் வெற்றிகரமாக தகவல் பெறப்பட்டிருக்கிறது.
இதற்கு முன்னர் வரை நாம் ரேடியோ அலைகள் மூலமாகத்தான் சிக்னலை பெற்று வந்தோம். இதில் தகவல்கள் கிடைக்க நமக்கு நீண்ட நேரம் ஆகும். இனி இந்த பிரச்சனை இருக்காது.

அதாவது சில ஆண்டுகளுக்கு முன்னர் பைக்கி எனும் விண்கலத்தை நாசா ஏவியிருந்தது. இது 2028ல் ஒரு விண்கல்லை ஆய்வு செய்ய இருக்கிறுது. இந்த விண்கலத்தை வைத்து தற்போது DSOC எனும் பரிசோதனையை நடத்தியிருக்கிறது. அதாவது 1.6 கோடி கி.மீ தூரத்தில் இருக்கும் இந்த விண்கலம், புகைப்படங்களை லேசார் ஒளி மூலம் பூமிக்கு அனுப்பியிருக்கிறது. இதனை நாசா வெற்றிகரமாக ரிசிவ் செய்திருக்கிறது.
விண்வெளியை பொருத்தவரை டவர் கிடையாது என்பதால் அங்கிருந்து அனுப்பப்படும் படங்கள் நமக்கு மிகவும் தாமதமாகத்தான ரிசிவ் ஆகும். உதாரணத்திற்கு செவ்வாய் கிரகத்தில் உள்ள ரோவர்கள் ஒரு HD படத்தை நமக்கு அனுப்புகிறது எனில், அது பூமிக்கு வந்து சேர 9 மணி நேரம் வரை ஆகும். செவ்வாய் கிரகத்திலிருந்து வீடியோ கால் சாத்தியமே இல்லை. ஆனால் லேசர் தொழில்நுட்பத்தில் இது சாத்தியம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இயற்கையில் போட்டான்களின் அதிர்வெண் அதிகம். அதிர்வெண் அதிகமாக இருக்கும் பொருட்கள் வேகமாக பயணிக்கும். அந்த வகையில் செவ்வாய் கிரகத்திலிருந்து லேசர் தொழில்நுட்பத்தை கொண்டு படங்களை வெறும் 9 நிமிடங்களில் பூமிக்கு அனுப்ப முடியும்.
லேசர் தொழில்நுட்பத்தை தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்கிற ஐடியா நீண்ட காலத்திற்கு முன்னரே தோன்றிவிட்டது. ஆனால் அதை சாத்தியப்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல. ஏனெனில் செவ்வாயிலிருந்து ஒரு லேசர் ஒளி வருகிறது எனில், அதை சரியாக ரிசிவ் செய்ய வேண்டும். பூமியின் எந்த பகுதிக்கு இந்த ஒளி வந்து சேரும் என்பதை கணிப்பது சிரமமாக இருந்தது. ஆனால் DSOC சோதனை மூலம் இந்த சிரமங்களை கடந்து லேசர் ஒளிசை நாசா ரிசிவ் செய்திருக்கிறது.
இன்னு வரையில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்கள் போகாமல் இருந்தததற்கு முக்கியமான காரணம் தகவல் பரிமாற்றத்தில் இருக்கும் பின்னடைவுதான். செவ்வாயிலிருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் அது பூமிக்கு வந்து சேர 20 நிமிடங்களாவது ஆகும். அப்படி இருக்கும்போது அங்கு பிரச்சனை எனில் அதை பூமிக்கு தெரியப்படுத்த தாமதமாகும். இது உயிருக்கே கூட ஆபத்தாக போய் முடிந்துவிட வாய்ப்பு இருக்கிறது. இதனை சரி செய்ய தற்போது லேசர் டெக்னாலஜி கை கொடுத்திருக்கிறது.
சிம்பிளாக சொல்வதெனில் 5ஜி தொழில்நுட்பத்திற்கு இணையான வேகத்தை இந்த லேசர் டெக்னாலஜி கொடுக்கும். இதனை கொண்டு சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களிலும் ஆய்வு நடத்த முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
-
யுரேனியத்தை பதுக்கும் ஈரான்.. அமெரிக்கா தொட கூட முடியாது! டிரம்புக்கு செக்! -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
குட்டையை குழப்பிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் சொதப்பல்! போர் இப்போதைக்கு முடியாது! -
ஈரான் - அமெரிக்கா போர் முடிவுக்கு வருகிறது? 24 மணி நேரத்தில்.. பாகிஸ்தான் பிரதமர் முக்கிய அறிவிப்பு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
ஹார்முஸில் கப்பல் போக ஆரம்பித்த அடுத்த நொடி.. ஈரான் கைகளுக்கு வரும் பல கோடி டாலர்! எப்படி? -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன?












Click it and Unblock the Notifications