பேத்தி திருமணத்தன்று மோடி அளித்த பிங்க் டர்பனை அணிந்த நவாஸ் ஷரீப்
இஸ்லாமாபாத்: லாகூருக்கு வந்திருந்தபோது பிரதமர் நரேந்திர மோடி அளித்த ரோஸ் கலர் டர்பனை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் தனது பேத்தியின் திருமணத்தன்று அணிந்திருந்தார்.
ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்புகையில் கிறிஸ்துமஸ் தினத்தன்று திடீர் என பாகிஸ்தான் சென்றார். லாகூர் நகருக்கு சென்ற அவர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபை சந்தித்து பேசினார்.

அன்றைய தினம் ஷரீபின் மகள் மரியம் நவாஸின் மகள் மெஹருன்னிஸாவுக்கும் பிரபல தொழில் அதிபர் சவுத்ரி முனீரின் மகன் ராஹீல் முனீருக்கும் திருமணம் நடைபெற்றது. மோடி புதுமணத் தம்பதியை வாழ்த்தி அன்பளிப்புகள் அளித்தார்.
மேலும் அவர் ஷரீபுக்கு ரோஸ் கலர் டர்பனை(தலைப்பாகை) பரிசாக அளித்தார். ஷரீப் தனது பேத்தியின் திருமணத்தின்போது மோடி அளித்த டர்பனை அணிந்திருந்தார். இதன் மூலம் அவர் மோடியின் பரிசுகளுக்கு அளிக்கும் மதிப்பு தெரிய வந்துள்ளது.

இது குறித்து ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில்,
மோடி அளித்த டர்பனை ஷரீப் அணிந்ததில் இருந்து அவர் அண்டை நாட்டின் மீது வைத்துள்ள மதிப்பு தெரிகிறது. மேலும் அவர் மோடியின் பரிசுகளை பெரிதும் மதிக்கிறார் என்பதும் தெரிகிறது என்றனர்.












Click it and Unblock the Notifications